இத்தனை நடிகைகலா ? குடும்பம் தான் முக்கியம் என்று -நடிப்பை தூக்கி எறிந்தவர்கள்.

April 15, 2021 at 8:08 am
pc

கதாநாயகியாக நடிக்க ஆரம்பிப்பவர்கள் வயது அதிகமானால், அல்லது வாய்ப்பு குறைய ஆரம்பித்த பின் அம்மா/அக்கா வேடங்கள் என்று நடிப்பார்கள், அல்லது தொலைக்காட்சி சீரியல் என்று இறங்குவார்கள். வேறு சிலரோ தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது, அரசியல் என்று வெவ்வேறு ஸ்டைலில் தங்களை தாங்களே பிஸியாக வைத்துக்கொள்வார்கள். ஹீரோயின்கள் என்றாலே பணம், புகழ் என்பதை தாண்டி ஒரு கிளாமர் இருக்கத் தான் செய்யும்.

ஹீரோயின்கள் பலர் தங்கள் திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு சினிமாவுக்கு முழுக்கு போடுவது என்பது நமக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இவ்வாறு கூறிய பல நடிகைகள் பின் நடிக்க வந்த சம்பவங்கள் நிறையவே நடந்து உள்ளது.

ஆனால் சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக மிக பிஸியாக இருந்த பொழுதே,எனக்கு நட்சத்திர அந்தஸ்து வேண்டாம், எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். நான் அவர்களுக்காக தான் என் நேரத்தை ஓதுக்கப்போகிறான் என்று சொல்லிவிட்டு, அதை அப்படியே செய்து காட்டிய ஒரு சிலரை பற்றிய தொகுப்பு தான் நாம் இப்பொழுது பார்க்கப்போவது..

ஷாலினி-அஜித்:

மூன்று வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து, தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்றவர். குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து பின் முன்னனி ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கியவர்.அமர்க்களம் படத்தில் தல அஜித்துடன் காதல் மலர, தன் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு, திருமணம் செய்தார். அதன் பின் நடிப்பு என்ற பேச்சே இவர் எடுக்கவில்லை.

இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா, ஆத்விக் என்று இரண்டு குழந்தைகள். தல அஜித் பிரியாணி செய்வதற்கு மட்டும் பேமஸ் இல்லை, தன் மனைவியின் ஹாபியான பேட்மிட்டன் விளையாட தன் வீட்டிலேயே இன் டோர் பெசிலிட்டி ரெடி செய்து கொடுத்துள்ளார். இந்தளவுக்கு புரிதலில் உள்ள இவர்கள் தான் நம் லிஸ்டில் நம்பர் ஒன்.

அசின்-ராகுல் சர்மா:

கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர். இவர் சிறந்த பரதநாட்டிய டான்சர். 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், தன் அனைத்து படங்களுக்கும் தானே டப்பிங் பேசியவர். சினிமாவில் நடிப்பு மட்டும் அல்லாது பல விளம்பரங்களிலும் நடித்தவர். மிராண்டா, தனிஷ்க், லக்ஸ் போன்றவற்றின் பிராண்ட் அம்பாசடர்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்த பொழுது, கஜினி ஹிந்தி ரீ-மேக்கில் அமீர் கானுடன் நடித்தார்.அதுவே அவரின் பாலிவுட் என்ட்ரி. பின்னர் ஹிந்தி படங்களில் பிஸியானார். மைகிரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் ஷர்மாவுடன் காதல் ஏற்பட, தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்துவிட்டு நடிப்புக்கு டா டா காட்டிவிட்டு 2016 ல் அவரை மணந்துக்கொண்டார்.கடந்த செவ்வாய்க்கிழமை இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரீமா சென்-ஷிவ் கரண் சிங்:

கொல்கத்தாவில் பிறந்த ரீமா சென் மாடெல்லிங்கில் இருக்கும் பொழுது தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் ஹீரோயினாக வளம் வந்தவர். வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு அம்சமாக அமைந்த ஒன்று. நல்ல ஹிட் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது 2012ல் இவர் தொழிலதிபர் ஷிவ் கரண் சிங்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு ருத்ரவீர் என்று ஒரு மகன் உள்ளார்.

நஸ்ரியா நஜிம்-பாஹாட் பாசில் :

நஸ்ரியா டிவி தொகுப்பாளராக பணியாற்றிவர். யூவ்வ என்ற ஆல்பத்தில் உள்ள ‘நெஞ்சோடு சேர்த்து’ என்ற பாடல் வாயிலாக இளைஞ்ர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆனார். பின்னர் தமிழ், மற்றும் மலையாளத்தில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படம் சூப்பர் ஹிட் ஆனதுக்கு இவரும் ஒரு காரணம். இயக்குனர் அஞ்சலி மேனனின் பெங்களூர் டேஸ் படத்தில் பாஹாட் பாசிலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அப்பொழுது இவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட, இருவீட்டார் சம்மதத்துடன் 2014 இல் திருமணம் நடைப்பெற்றது.

அதன் பின் இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனினும் தன் பேட்டிகளில் நல்ல கதை அம்சம் உள்ள படம் என்றால் நஸ்ரியா கண்டிப்பாக நடிப்பார் என்று கூறினார் பாஹாட், ஏனோ இன்னும் அந்த மாதிரி கதை கிடைக்கவில்லை போல.

சந்தியா:

காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தியா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். ஜீவாவுடன் டிஷ்யூம், சிம்புவுடன் வல்லவன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்த சந்தியா திருமணத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகி தற்போது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website