ஈஸ்வரன் படத்தின் இயக்குனர் தாயார் திடீர் மரணம்..

January 19, 2021 at 8:58 am
pc

தமிழில் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன், அதன் பின் நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.

தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். பொங்கல் தினத்தற்கு கூட இவர் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ஈஸ்வரன் படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஜெயலட்சுமிக்கு 62 வயது.

திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் அனுதாபங்களை வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website