யோகிபாபுவின் குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா ?

July 23, 2021 at 11:51 am
pc

யோகிபாபு தனக்கு அண்மையில் பிறந்த ஆண் குழந்தைக்கு, தன்னுடைய இல்லத்தில் பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார்.   

இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, புகைப்படங்கள் எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் யோகிபாபுவும் அவருடைய மனைவியும் இருப்பதை காண முடிகிறது. யோகிபாபுவின் ஆண் குழந்தை தொட்டிலில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

மேலும், யோகிபாபுவின் குழந்தைக்கு தமிழ் கடவுள் முருகனின் பெயரில் ஒன்றான ‘விசாகன்’ என்று வைத்திருக்கிறார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website