அட பாவிங்களா -காரில் வைத்து மாணவியை சீரழித்த பத்ம சேஷாத்திரி கராத்தே மாஸ்டர்!

June 7, 2021 at 7:27 am
pc

 பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே குழுமத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ஒருவர் சிக்கியுள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், தற்போது இருக்கும் மாணவிகள் என பலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த பொலிசார், அவரின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி அதன் அடிப்படையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது அவர் நான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான், என் மீது மாணவிகள் புகார் கொடுத்தும், பள்ளி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இப்படி செயலில் ஈடுபட்டதாக இரண்டாம் நாள் விசாரணையில் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில், மூன்றாம் நாள், ஆசிரியர் ராஜகோபாலன் குற்றச்சாட்டு வைத்த ஆசிரியர்கள் மற்றும் உடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களை நேரில் அழைத்து அவர் முன்னிலையில் விசாரணை நடத்தினர். அப்போது ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது 100 சதவீதம் உண்மை தான் என்று கூறினார்.

இதையடுத்து தற்போது பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது பள்ளி மாணவி ஒருவர், புகார் அளித்துள்ளார்.

அதில், தன்னை நாகையில் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள காரில் சென்ற போது கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவிகளுக்கு கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.

அதை அவரது நண்பர்களான 3 பேர் நேரில் பார்த்ததாக பொலிசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதைத் தொடர்ந்து கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் அனைத்து மகளிர் பொலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், கெவின்ராஜ் மாணவிகளை வெளி மாவட்டங்களில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி பயிற்சிக்கு சென்னை கிளையில் உள்ள பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற போது, கெவின்ராஜ் தன்னுடைய சேட்டையை செய்து வந்துள்ளார். அவர் மட்டுமின்றி, உடன் வரும் தனது நண்பர்களை வைத்தும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

கெவின்ராஜ், பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தில் உள்ள அறக்கட்டனை நிர்வாகிகள் சிலரிடம் நெருக்கமாகவும், நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளார். இதனால் நிர்வாகிகள் சிலரும் மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website