பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்

January 10, 2021 at 10:51 pm
pc

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜிவ் சந்த். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். ராஜிவ் சந்த் என்பவர் தன் மனைவி ரித்துவுடன் கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் தனது குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு கல்விக் கட்டணம் செலுத்த தன்னுடைய காரில் சென்றிருக்கிறார். தன் மனைவியை காரிலேயே இருக்க சொல்லி அவர் மட்டும் பள்ளிக்குள் சென்றுள்ளார்.

காரில் மனைவி இருப்பதால் கார் சாவியை காரிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். இதைக்கண்ட அங்கிருந்த இரு திருடர்கள் திடீரென காரில் ஏறியுள்ளனர். அப்போது ரித்து உள்ளே இருந்ததை கவனித்ததால் திருடர்களில் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும், மற்றொருவர் பின்புறம் ஏறி, ரித்து சத்தம்போடுவதற்கு முன்பே அவர் முகத்தை மூடியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 5 கிமீ தூரம் சென்றதும் அம்பாலா டோல் பிளாசா அருகே ரித்துவை கீழே தள்ளிவிட்டு காரை மட்டும் ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண் இருப்பதை கூட கவனிக்காமல் திருடர்கள் செய்த செயல் வைரலாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website