புகார் கொடுக்க வந்த பெண்ணை பிடித்து போலிஸ் செய்த மோசமான காரியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

புகார் கொடுக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த போஸாரின் செயல் இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சகர்ஷா மாவட்டம் நுகாட்டா போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த உயர் அதிகாரியான சசிபூஷன் சின்ஹா என்பவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அந்த பெண் தன் மகனை பெயிலில் எடுக்க போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.
அந்த பெண்ணை தனக்கு மசாஜ் செய்ய சொல்லிவிட்டு இவர் அந்த பெண்ணின் வழக்கு குறித்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் போனில் “இவர் ஏழை பெண், எவ்வளவு பணம் நான் கொடுக்க முடியும்? நான் பணத்தை ஒரு கவரில் போட்டு 2 பெண்களை ஆதார் கார்டுடன் அனுப்பி வைக்கிறேன். எப்பொழுது அனுப்பி வைக்க வேண்டும் என சொல்லுங்கள்” என கேட்கிறார் மறுமுனையில் “திங்கட்கிழமை அனுப்பி வையுங்கள். எல்லாம் இன்று முடிந்துவிடும்” என சொல்கிறார்.
அதற்கு போலீஸ் காரர் “திங்கட்கிழமை அவர்களிடம் முகவரியையும் செல்போன் நம்பரையும் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.
நான் இதற்காக ரூ10,000 என் சொந்த பணத்தை கொடுத்துவிடுகிறேன்” என கூறினார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.