வீடியோ காலில் மகன்… தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம்! கூடா நட்பால் சிதைந்த குடும்பம்.

February 25, 2020 at 10:40 am
pc

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ். ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், பொள்ளாட்சியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நான்கு வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில், தீபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளிர் சுய உதவி குழுவில் இணைந்தார். அதன் பின் அங்கிருக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.

இதனால் அந்த கடனை வசூலிப்பதற்காக ஒவ்வொரு மாதமும், அருணாசலபுரத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவர் தீபா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தோணி பிரகாஷ், லொரி ஓட்டுவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

அந்த நேரத்தில் சொரிமுத்து அடிக்கடி தீபாவை சந்தித்து, நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அந்தோணி பிரகாஷிடம் கூறிய நிலையில், ஒரு நாள் மகனிடம் வீடியோ காலில் பேசும் போது, சொரிமுத்து வீட்டில் இருப்பதை அவர் கண்டுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தீபா தற்கொலை முயன்றதால், அவர் காப்பாற்றப்பட்டார். இருப்பினும் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்ளததால், அந்தோணி அவரை மீண்டும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, அந்தோணிபிரகாஷ் வேலைக்கு சென்றிருந்த போது, கடந்த 20-ஆம் தீபா தன்னுடைய நான்கு வயது மகன் லோகேஷை அழைத்துக் கொண்டு, ஆண் நண்பர் சொரிமுத்துவுடன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.

மறுநாள் சிவராத்திரியை முன்னிட்டு தீபா தனது மகன் மற்றும் சொரிமுத்துவுடன் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றுள்ளார் .

தீபா மட்டும் கோவிலுக்குள் சென்ற நிலையில் அவரது கணவர் அந்தோணி பிரகாஷ், மனைவி தீபாவை வீடியோ காலில் அழைத்துள்ளார். அப்போது செல்போனை லோகேஷ் கையில் வைத்திருந்ததால், லோகேஷ் பேசியுள்ளார்.

அப்போது அந்தோணி நீ எங்கிருக்கிறாய்? என்று கேட்ட போது, லோகேஷ் நான் ஒரு மாமவிடம் இருக்கிறேன் என்று சொரிமுத்துவை வீடியோ காலில் கட்டியதால், ஆத்திரமடைந்த சொரித்து முத்து, லோகேஷை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதனால் சுயநினைவை இழந்த லோகேஷை கண்ட, தீபா உடனடியாக அவனை விடுதிக்கு தூக்கி சென்றுள்ளார்.

சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அச்சம் அடைந்த இருவரும் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அப்போது சொரிமுத்து நான் தான் தந்தை என்று மருத்துவமனையில் கையெழுத்திட்டுள்ளார்.

அதன் பின், சிறுவன் லோகேஷுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து உடனடியாக தீபா கணவருக்கு தெரிவித்ததால், மருத்துவமனைக்கு வந்த அந்தோணி பிரகாஷ் நான் தான் சிறுவனின் தந்தை என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவமனையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சமயத்தில் சொரிமுத்து அங்கு நின்றதால், அவரிடம் அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் சொரிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சிறுவனின் சந்தேக மரணம் தொடர்பாக அந்தோணி பிரகாஷ் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில், தீபாவுக்கும் சொரிமுத்துக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது, இதற்கு லோகேஷ் இடையூறாக இருந்ததால் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதை தீபா ஒப்புக் கொண்டதால், அவரை பொலிசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சொரிமுத்து, பொலிசாரிடம் சரண் அடைந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website