E-Nuggets செயலி மூலம் மோசடி.. ரூ.17 கோடி ரொக்கம்.. வலையில் சிக்கிய தொழிலதிபர்!

September 11, 2022 at 11:03 am
pc

E-Nuggets (இ-நக்கெட்ஸ்) என்ற செல்போன் செயலில் மூலம் மோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கவே தொழிலதிபர் அமீர் கான் 
இ-நக்கெட்ஸ் என்ற செயலியை உருவாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் போனஸ் வழங்கி மக்களிடம் நம்பிக்கையை பெற்று பின்னர் மக்களின் பணம் அதிகரிக்க ஆரம்பித்த உடன் செயலியை செயலிழக்க செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்றும், இதுபோல் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் பல இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக கொல்கத்தா மேயர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தவறு செய்தவர்கள் வீட்டில் சோதனை செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு தொடர்பு உள்ளதா? என பாஜகவின் சுவந்து அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website