ICU -வில் நடிகர் விஜயகாந்த்.., மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்தது.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவதிப்பட்டு வருகிறார். இதனால், அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில், தீபாவளி பண்டிகையில் குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும்படியான புகைப்படங்கள் வெளிவந்து கண்கலங்க வைத்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அளித்த விளக்கம்
இதனால், பல வதந்திகள் வெளிவந்ததற்கு, விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்துக்கு ஏற்கெனவே இருக்கும் உடல்நிலை பாதிப்பால், உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தாமாகவே சுவாசிக்கிறார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.