திருநங்கைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி பிரிவு!

February 21, 2021 at 6:44 am
pc

பொதுவாக காவல் நிலையங்கள் என்பது சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்கும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கும்; நடந்த குற்றங்களை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜர்படுத்துவது என காவல் நிலையங்கள் அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் இடமாகவும், மகளிர் காவல்நிலையம் மகளிரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு அமைக்கப்படும் என ஹைதராபாத் காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விடுத்த செய்திக்குறிப்பில் திருநங்கைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 150 பேர் கொண்ட இந்த பிரிவு துவக்கப்படும். இதில் திருநங்கைகள் தங்கள் ஏற்படும் சமூக பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். திருநங்கைகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 100 அல்லது வாட்ஸ்அப் 9490617444 ஐ டயல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருநங்கைகளின் சமூகத்தின் பிரதிநிதிகள், சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர், இதில் கல்வி பற்றாக்குறை, வேலைவாய்ப்பு கிடைக்காதது, வாடகைக்கு வீடுகளைக் கண்டுபிடிக்க இயலாமை, நெருக்கமான கூட்டாளர் வன்முறை, தெருவில் துன்புறுத்தல் மற்றும் சமூக சமூக வன்முறை ஆகியவை குறித்த பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட்டன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website