டெல்லியில் இவான்கா டிரம்ப் அணித்திருந்த உடையால் சர்ச்சை: காரணம் இதுதான்..

February 25, 2020 at 10:54 am
pc

இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வதேச அளவில் சமூக வலைத்தள பக்கங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி, மகள் உள்ளிட்டவர்கள் தொடர்பில் சமூக வலைத்தள பக்கத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்காவின் உடை குறித்து தற்போது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.

ஆக்ராவில் யமுனா ஆற்றின் அருகே அமைந்துள்ள தாஜ்மஹாலை பார்வையிட சென்ற இவான்கா டிரம்ப் அணிந்திருந்த உடையானது இதற்கு முன்னர் ஒருமுறை அவர் அணிந்திருந்தார் என சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

முன்னர் அர்ஜென்டீனா நாட்டுக்கு சென்ற போது இவான்கா இதே உடை அணிந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Proenza Schouler என்ற இந்த உடையின் விலை சுமார் 1.7 லட்சம் என கூறப்படுகிறது. பொதுவாக திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஒருமுறை பயன்படுத்திய உடையை, பொது மேடைகளில் பயன்படுத்துவதில்லை.

அந்த நடைமுறைக்கும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளார் இவான்கா டிரம்ப் என அவரது ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website