தடுப்பூசி தயாரிப்பில் அசத்தும் இந்தியா- இன்னும் 5 மாதத்திற்குள் ஐந்து புதிய தடுப்பூசிகள்!

April 13, 2021 at 8:39 am
pc

தற்போது, ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே, நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, ரஷ்யாவின், ‘ஸ்புட்னிக் – வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்’ ஆகிய ஐந்து தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில், ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிக்கு அடுத்த, 10 நாட்களில் அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ஜூன் மாதம் முதல், ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள், புதிதாக ஐந்து புதிய தடுப்பூசிகள் சந்தையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website