மேலாடை இன்றி நீந்திய பெண்கள்!ஏன் தெரியுமா ?

May 1, 2022 at 2:10 pm
pc

ஜெர்மனியில் பொதுக் குளத்தில் பாலின வேறுபாட்டை களைய பெண்கள் மேலாடை இன்றி நீந்தினர். 

ஜெர்மன் சிட்டியில் உள்ள கோட்டிங்கன் (Goettingen) என்ற பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் பெண் நீச்சல் வீராங்கனைகள் மேலாடை இன்றி நீந்தினர். பாலின சமநிலை கோரியும், பாலின வேறுபாட்டை களையும் பெண் நீச்சல் வீராங்கனைகள் இவ்வாறு மேலாடை துறந்து நீந்தினர். 

இதையடுத்து, அந்த நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடை இன்றி நீந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அந்த நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடை இன்றி நீந்த அனுமதியில்லை. 
இதனை பெண்ணார்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். எனினும் உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டுவருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website