சூப்பரா கூந்தல் வளரணுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க..

June 9, 2021 at 8:21 am
pc

இன்றைய இளம் தலைமுறையினரை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தலைமுடி உதிர்தல்.இளைஞர் மற்றும் இளம்பெண்கள் தங்களது சிறுவயதிலிருந்தே முடி கொட்டும் பிரச்சனை இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர்.ஆனால் இதற்கு சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால், தலைமுடிக்கு வயதான காலத்தில் கூட டை அடிக்க வேண்டாம்.

முடியை பராமாரிக்க சூப்பர் டிப்ஸ்ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.செம்பரத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.வெந்தயம் மற்றும் குன்றிமணி பொடியை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

வேப்பிலை குளியல்வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து சம அளவில் அரைத்து கொள்ளுங்கள்.இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் `பேக்’ போடுங்கள். தலையை சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால், தலையில் இருக்கும் ஈர்கள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலைமுடியை கறுகறுவென்று வளரும்.முடி உதிர்வு பிரச்சனையை போக்கும், இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.பலாக்கொட்டை குளியல்பலாக்கொட்டையை காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள், அரை டீஸ்பூன் பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் இந்த மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க வேண்டும்.தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள்.பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது நின்று நன்கு முடி வளர ஆரம்பிக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website