இரவில் தெரிந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. உஷாரா இருங்க!

September 17, 2021 at 6:45 am
pc

சில உணவுகளை இரவு நேரத்தில் தொடவே கூடாது. மீறினால் உடல் ஆரோக்கியம் குறைய வாய்ப்பு உள்ளது.

  • பால் குடிப்பது நல்லது தான். ஆனால் இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.
  • இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது.
  • பூசணி, கடலை, சுரக்காய், பாவைக்காய், கோவைக்காய், தர்பூசணி, செளசெள போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்று.
  • சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் தூக்கம் பாதிக்கப்படும்.  இரவு 7 அல்லது 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். இரவு அதிக நேரம் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். காலையில் பசி எடுக்காது.
  • இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில் அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும் ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website