கபம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி -தூதுவளை ரசம்.

February 25, 2020 at 1:20 pm
pc

தேவையான பொருட்கள்.:
தூதுவளை இலைகள் – 15,
மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – ஒரு கப்,
புளிக்கரைசல் – ஒரு கப்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
தட்டிய பூண்டு – 5 பல்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும்.

பிறகு, மிளகு – சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்.

மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பயன்கள்.:
கபம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி நீங்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website