முட்டை சாப்பிடாம இருந்தால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?.. அதிர்ச்சி தகவல்..!

February 25, 2020 at 1:06 pm
pc

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில், தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.

இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமக்கு கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

இது தவிர உடல் எடையைக் குறைப்பதற்கும் முட்டை உதவி செய்யும் என்பதால் நம் அன்றாட உணவில் தாராளமாக முட்டையை சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தியாவை பொறுத்தவரை மூன்றில் ஒரு குழந்தை எடைக்குறைவு மற்றும் வளர்ச்சிக்குறைபாடு நோய்கள் பாதிப்புக்கு ஆளாகிறது. உணவுக்குறைபாடு தொடர்பான நோய்களால் நாளொன்றுக்கு சராசரியாக 3000 குழந்தைகள் இறக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளுக்கு பல நிறுவனங்கள் பலவும் உதவி புரிந்து வருகின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website