4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

August 2, 2021 at 10:19 pm
pc

தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 20
புளி – எலுமிச்சை பழம் அளவு
பூண்டு – 20
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு
தக்காளி – 1
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு வெந்தயம் – தாளிப்பதற்கு
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம் போட்டு 
அதனுடன் கருவேப்பிலை போட்டு  தாளிக்க வேண்டும். அதனுடன் முழு சின்ன வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி , பின் பூண்டும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின் அதனுடன் தக்காளியும் சேர்த்து  தக்காளி நன்கு மசியும்படி வதக்க வேண்டும்.பின் அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து  அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து  நன்கு கொதிக்க  வைத்து  கெட்டியானவுடன்  இறக்கவும்.சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website