maira போச்சுன்னு நகர்ந்து வா.. கார்த்திக் குமாரின் 2வது மனைவியின் ஆவேச பதிவு..!


பிரபல பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனி தனது சமூக வலைத்தளத்தில் ’மயிரா போச்சுன்னு நகர்ந்து வா’ என்று தனது கணவருக்கு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சுசித்ரா ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து இருந்தார். தனுஷ், த்ரிஷா உட்பட பல பிரபலங்கள் குறித்து அவர் கூறியது சர்ச்சைக்குள்ளாகிய நிலையில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் கூறிய கார்த்திக் குமார் ’தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை பெருமையுடன் ஒப்புக்கொள்வேன் என்றும் அதை மறைக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இருந்ததால் நானும் ஓரினச்சேர்க்கையாளர் என்ற அர்த்தம் இல்லை’ என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனி தனது சமூக வலைத்தளத்தில் ’வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, அதில் வாதங்கள் செய்து கொண்டிருக்க நேரமில்லை, ஜஸ்ட் மயிரா போச்சு என்று கூறி விட்டு நகர்ந்து வா என்னுடைய அன்பு கணவர் குமார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.