ORS கரைசல் தயாரிக்க இந்த ட்ரிக் பல்லோவ் பண்ணுங்க …!!

பொதுவாகப் பலருக்கும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால் பல பிரச்சனைகள் ஏற்றப்படும். அதனால் கை,கால் நடுக்கம், தலைசுத்தல், மற்றும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்வதற்கு இந்த ORS மிகவும் உதவும்.சரிவாங்க ORS தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி,மயக்கம் இது போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை என்னவென்றால் உடலில் நீர்ச் சத்தின் அளவு குறையும். அதனைச் சரிசெய்வதற்கு ORS பவுடர் பரிந்துரைப்பார். அதை நாம் கடைகளில் வாங்கி குடிக்கலாம் அல்லது வீட்டிலேயே எளிமையாக ors தயார் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
தண்ணீர் – 1 லிட்டர்
சர்க்கரை – 6 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன் (தூள் உப்பு)
ORS டிரிங்க் எப்படி தயார் செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொண்டு அதில் ஆறு டீஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையில் தண்ணீருக்குப் பதிலாகப் பழச் சாறு மற்றும் வேறு எந்த குளிர்பானங்கள், பால் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது.
இந்த கலவையில் சர்க்கரையில் அளவை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.
அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையைத் தயார் செய்து 24 மணிநேரத்தில் குடிப்பது நல்லது.
ORS டிரிங்க் எப்படிப் பயன்படுத்துவது
உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள் இந்த ORS கலவையை இரண்டு இருந்து மூன்று முறை குடிப்பது நல்லது. அனைவரும் இதைக் குடிக்கலாம்.
சிறுவயதிலிருந்து பெரியவர்கள் வரை இந்த கலவையைக் குடிக்கலாம். வயத்திற்கு ஏற்றவாறு இந்த கலவையின் அளவு மற்றும் முறை மாறுபடும்.
சிறு வயதுக் குழந்தைகளுக்கு அதாவது இரண்டு வயதில் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கால் லிட்டர் வரை இந்த ORS கலவையைக் குடிக்கலாம்.
அதற்கு மேற்ப்பட்ட வயதில் இருந்து 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை லிட்டர் அளவிற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறை ஒரு நாளைக்குக் குடிக்கலாம்.
9 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ORS கலவையை இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை குடிக்கலாம்.