10 ஆண்டுகளுக்கு பின்னர் கைக்கு வரும் ஆட்சி ; தயாராகும் திமுக லிஸ்ட்.

April 16, 2021 at 8:43 am
pc

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற போகிறோம் என்ற மனநிலையில் திமுக தொண்டர்கள் உள்ளதுடன் ஒரு நாள் கூட தாமதம் கூடாது என்ற உத்வேகத்துடன் திமுக தலைமையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைமை அடுத்தடுத்து வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு, 3 விதமான லிஸ்ட்களை தயார் செய்துள்ளது. அதில் அதிகாரிகள் பற்றிய முதல் லிஸ்டில், உயர் அதிகாரிகள் யார்? திமுக ஆட்சியில் விசுவாசமாக இருந்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியில் நேர்மையாக செயல்பட்டவர்கள் என பட்டியல் தூள் தயாராகின்றதாம்.

இதில் தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் போனில் தொடர்பு கொண்டு நன்றியும் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அத்துடன் இரண்டாவதாக தற்காலிகமாக ரெடியான அமைச்சர்கள் பட்டியலுடன் விவாதம் நடந்து வருகிறதாம். இதில் அதிமுகவின் எம்ஆர் விஜயபாஸ்கர், ஓபிஎஸ் ஆகியோர் தோற்றால், அந்தந்த தொகுதிகளில் அமைச்சர்களை எதிர்த்து களமிறங்கியுள்ள செந்தில் பாலாஜி மற்றும் தங்கத்தமிழ் செல்வனுக்கு பதவி நிச்சயம் என கூறப்படுகின்றது.

இதற்கு காரணம் முக்கிய அமைச்சர்களை தோற்கடித்தால் அமைச்சர் பதவி என்று வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போதே தலைமை கூறியது தானாம். மூன்றாவது லிஸ்டில், திமுக ஆட்சியில், யார் சபாநாயகர் பதவிக்கு , திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஆதரவு குவிகிறதாம்.

இவர் திமுகவில் சீனியர் உறுப்பினராம். அதோடு திமுக ஆட்சியில் சமூக நலத்துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தாராம். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ள இவர், பாஜக வேட்பாளர் சரஸ்வதியை எதிர்த்து நிற்கிறார். இதனால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதேவேளை இவர் சபாநாயகராக நியமிக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் பெறுவார் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website