தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு யாருக்கும் சிஏஏ சட்டத்தால் பாதிப்பு இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

February 21, 2020 at 7:38 pm
pc

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுகவின் சக்கரபாணி பேசுகையில், சிஏஏ தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன, என்று கேட்டார்.

அப்போது முதல்வர் எடப்பாடி குறுக்கிட்டு பேசுகையில், தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் பாதிப்பு இல்லை திட்டவட்டமாக கூறினார். இதில் பல விஷமிகள் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிஏஏ விவகாரத்தை வைத்து மக்களை ஏமாற்றி திசைதிருப்பி தவறான தகவல்களை பரப்புகின்றனர். அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. குடியுரிமை சட்டத் திருத்தம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேற்று சட்டசபையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வண்ணாரப்பேட்டை கலவரத்தின் பின்னணியில் விஷமிகளின் சதி இருப்பதாக கூறினார். CAA போராட்டத்தில் விபத்தில் கொல்லப்பட்டதாக கூறி, தவறான போட்டோவை பரப்பி கலவரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website