மூச்சடக்கி போராடி வென்ற இந்திய அணி.., தூணாக இருந்த இரு வீரர்கள்

January 11, 2021 at 3:13 pm
pc

இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இந்தியா 34 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. புஜாரா 9 , ரஹானே 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 5-ம் நாளில் இந்திய அணி கடுமையாகப் போராடியது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 96 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக ஆடினார்.

அவர் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி வெற்றி பெற 127 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தது. 5 விக்கெட்டுகள் மீதமிருந்தன. விஹாரி 4, அஸ்வின் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 5-வது நாளின் கடைசிப் பகுதியில் வெற்றி, தோல்வி, டிரா என மூன்று முடிவுகளும் சாத்தியம் என்பதால் பரபரப்பான கட்டத்தை நெருங்கியது
சிட்னி டெஸ்ட். வெற்றி சாத்தியம் இல்லை என்பதால் விஹாரியும் அஸ்வினும் டிராவுக்காக விளையாடினார்கள்.

ஆஸ்திரேலிய அணியினர் தொடந்து பவுன்சர் பந்துகளை வீசியதால் பலமுறை இந்திய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் தோல்வியடையக் கூடாது என்பதற்காக விஹாரியும் அஸ்வினும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு தங்களுடைய விக்கெட்டைக் காப்பாற்றினார்கள்.

காயத்தில் விளையாடிய விஹாரி, ரன்கள் எடுக்க முயற்சி செய்யாமல் முழுக்க முழுக்கத் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். போராட்டமும் விடாமுயற்சியும் கிரிக்கெட் உலகின் பலத்த பாராட்டைப் பெற்றது. விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி நாளில் இந்திய அணியினரின் போராட்டத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. 4-வது டெஸ்ட், பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. சமூகவலைத்தளங்களில் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் விஹாரி, அஸ்வினின் முயற்சிக்கு தங்களுடைய பாராட்டை பொழிந்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website