“விருஷ்கா” வைரலாகும் விராட் கோலியின் பெண் பெயர் ?

January 12, 2021 at 4:00 pm
pc

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்த பிறகு அனுஷ்கா கர்பமாகினார். ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விராத் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்களது குழந்தை இந்த உலகில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு அனைவரின் ஆசியும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் கோலியின் குழந்தைக்கு விருஷ்கா என தான் பெயர் வைப்பார்கள் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website