NZvsIND முதல் டெஸ்ட் போட்டி: வில்லியம்சன் கேம் பிளான்…, இந்திய பேட்ஸ்மேன்கள் மீது நியூ.ஸி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் !!

February 21, 2020 at 2:38 pm
pc

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள்.

இந்தியா – நியூஸிலாந்து இடையே நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன்னில் நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் நாளான இன்று, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா, மாயணக் அகர்வால், விராட் கோலி என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த தனது அணியில் வேகபந்து வீச்சாளர்களை முழு வீச்சில் இறக்கியுள்ளார். வில்லியம்சன் இதுவரை வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இந்தியாவிற்கு எதிராக நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தங்களது அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தியாவின் பேட்டிங்கை அட்டாக் செய்துள்ளார். மேலும் அவரது இந்த யுக்தி சரியாக செயல்படுகிறது. கயல் ஜேமிசன் 3 விக்கெட் வீழ்த்தினார். டிம் சௌதஈ மற்றும் ட்ரெண்ட் பெல்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். புதுமுக வேகப்பந்து வீச்சாளரான ஜெம்மிசன் பந்துவீசி இந்திய அணியை மிரட்டி வருகிறார். இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மன்களான புஜாரா, கோலி ஆகியோரின் விக்கெட்டை இவர் கைப்பற்றினார்.

ind vs nz day 1 rain interrupts play

மழை காரணமாக முதல் நாள் அட்ட முடிவில் முடிவில் இந்தியா 55 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 122 ரன் எடுத்துள்ளது. துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே 38* ரன்னுடன் ரிஷப பண்ட் 10 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். தற்போது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website