NZvsIND 1வது T20: நிலையான தொடக்கத்தை கொடுத்த இந்தியா !! நடுவில் அடுத்தடுத்த வீழ்ந்த முக்கிய விக்கெட்கள்.

January 24, 2020 at 3:27 pm
pc

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் நியூஸிலாந்தில் நடந்துவருகிறது. இன்று முதலாவது போட்டி ஆக்க்லாண்ட்-ல் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி நியூஸிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன் குவித்தது. அசத்தலாக ஆடிய கோலின் முன்றொ, கேப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அசத்தலாக அரை சதம் அடித்தனர்.

204 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி, மற்றும் KL ராகுல் நிலையாக ஆடினார்கள் ராகுல் 56 கோலி 45 ரன் எடுத்து வெளியேறினர். சிவம் துபே 13 ரன் எடுத்து வெளியேறினார். இந்தியா 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து ஆடிவருகிறது.
ஷ்ரேயஸ் மனிஷ் பாண்டே தற்போது களத்தில் உள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *