27ஆண்டிற்கு பிறகு ஆசிய மல்யுத்தத்தில் 87Kg எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார் !!

February 21, 2020 at 8:00 pm
pc

2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த மல்யுத்த போட்டியில் ‘கிரிகோ ரோமன்’ 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் ப்ய்ரகிஸ்ஸ்டான் நாட்டை சேர்ந்த அசாத் ஷாலிடினோவ் என வீரரை 5-0 என கண்ணகி இந்தியாவின் முதல் ஆசிய மல்யுத்தத்தில் கிரெகோ-ரோமன் தங்க பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு 27வருடத்திற்கு முன்பு 1993 இல் பப்பையு யாதவ் எனபவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்றார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்த சுனில் குமார் தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 130 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் மெஹர் சிங் 1-9 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மின்செக் கிம்மிடம் தோல்வி அடைந்தார்.

தங்கம் வென்ற சுனில் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. பல அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website