மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.133 கோடி கொரோனா நிவாரண நிதி: வெளியான அதிரடி உத்தரவு!

July 16, 2021 at 8:59 am
pc

கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.133 கோடிமுழுமையாக வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, உதவி தொகை வழங்க அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் வழங்கப்பட்ட ரூ.69 கோடி தவிர மீதமுள்ள ரூ.64 கோடி நிலை என்ன? ரூ.133 கோடி தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது? என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு?

எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொருளாதார அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கிய விவரம் குறித்து விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website