சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்த்து விடிய விடிய போராடியவர்களை, காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர் !!

February 15, 2020 at 11:15 am
pc

சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை பிப்.,14ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண், பெண்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் வண்ணாப்பேட்டை காவல் இணை ஆணையர் விஜயகுமாரி படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் போராட்டக்காரர்களை தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட செய்தி, அடுத்த சில நிமிடங்களில் தமிழ்நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவியது.

சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி, வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு தொடங்கிய சாலை மறியல் கிண்டி, ஆலந்தூர் என தொடர்ந்தது.


கல்பாக்கம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், பழனி. தேனி, நாகர்கோவில், கன்னியாகுமரி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இரவு முழுவதும் போராட்டங்கள் நடந்த இடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. ECR சாலை, கல்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் பல இடங்களில் சாலை நெரிசல் ஏற்பட்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *