உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12 சதவீதம் பேருக்குத் தான் கோவிட் தடுப்பூசி.

June 16, 2021 at 6:06 am
pc

உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12 சதவீதம் பேருக்குத் தான் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி கோவிட் தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகி உள்ளன. அதில், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கோவிட் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

‘உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நாளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட, மிக அதிக வேகத்தில் தொற்று பரவி வருகிறது. ஏழை நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீள முடியும்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website