எல்லை மீறிய மன்மத விளையாட்டு.., 1,000 காதலி வைத்திருந்தவருக்கு நேர்ந்த

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அட்னன் ஒக்தர் (வயது 64). இவர் தன்னை ஒரு மதத்தலைவராக அடையாளப் படுத்திக் கொண்டவர். பல ஆண்டுகளாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது, இவர் கூறிய கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அட்னன் ஒக்தர் நீதிபதியிடம் கூறியதாவது, எனக்கு பெண்கள் மீது அளவு கடந்த அன்பு உள்ளது. அன்பு ஒரு மனிதப் பண்பு. நான் மிகவும் ஆண்மை மிக்கவன். அதனால், எனக்கு காதலிகள் மட்டுமே 1,000 பேர் உள்ளனர்”” என்று தெரிவித்தார். மேலும், தன்னை சுற்றியுள்ள பெண்களை பூனைக்குட்டிகள் என்று வர்ணித்து,
அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

அவரின் ஆசை வலையில் சிக்கிய பெண்கள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளனர். பல நேரங்களில் அவர் வன்புணர்வு செய்த பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வைத்துள்ளார். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், சுமார் 69,000 கருத்தடை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். வழக்கை விசாரித்து இஸ்தான்புல் நீதிமன்றம், ஒக்தருக்கு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.