கழுத்தில் நாய் சங்கிலி.., கணவனை கேவலமாக வாக்கிங் கூட்டி சென்ற பெண்…

கனடாவில் கொரோனா பரவல் காரணமாக கியூபெக் நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு விதிமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெளியே அத்யாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்பவர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி வழங்கப்பட்ட விதிவிலக்கை பயன்படுத்த ஒரு பெண் தன்னுடைய கணவனையே நாயாக மாற்றிவிட்டார்.
ஒரு அசல் நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போல கழுத்தில் சங்கிலியை மாட்டி, 2 கால் மனிதனை 4 கால் பிராணியைப் போல நடக்க வைத்து நடுரோட்டில் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த விசித்திரத்தைப் பார்த்த காவல் அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்துள்ளனர்.
அதற்கு பதில் அந்தப் பெண் செல்லப்பிராணி வைத்திருப்பவர்கள் ஊரடங்கு நேரத்திலும் வாக்கிங் செல்லலாம். நான் அதைத்தான் செய்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார். இதைக் கேட்டதும் காவல் துறை அதிகாரிகள் ஒருவேளை சிரித்து இருக்கலாம். ஆனால் கடமை தவறாத அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறையை மீறியதற்காக அந்தத் தம்பதிக்கு ரூ.3.44 லட்சம் அபராதத்தை விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.