கால்பந்து வீரர் அனுப்பிய புகைப்படங்கள்: அதிர்ந்துபோன சிறுமியின் தாயார்!

January 11, 2021 at 4:52 pm
pc

பிரித்தானியாவில் 34 வயது மதிக்கத்தக்க கால்பந்து வீரர், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிர்மிங்காம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சைமன் பர்ச் என்ற வழக்கறிஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு கால்பந்தாட்ட வீரரான Leroy Robinson(34) என்பவர் கோடை 14 வயது சிறுமியுடன் நட்டை ஏற்படுத்தி கொண்டதாகவும், அதன் பின் அந்த சிறுமியிடம் பேசுவதற்காக, தொலைப் பேசி எண்களைப் பெற்று கொண்டு, பாலியல் தொடர்பான புகைப்படங்களை பகிறத் துவங்கியதாக கூறினார்.

மேலும், அந்த சிறுமியை பாலியல் செயல்களைச் செய்யும்படி கூறியுள்ளார்.

சிறுமி தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததால், சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார், அவரது தொலைப்பேசியை வாங்கிப் பார்த்த போது, Leroy Robinson அனுப்பிய புகைப்படத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவரது தாயார் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது, நான் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியிடம் நடத்தப்பட விசாரணையில், அவருடன் நட்பாக இருந்தது நினைத்தது வேதனைப்படுவதுடன், கடும் சங்கடத்திற்குள்ளாகியுள்ளர்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து வெறுப்பதாகவும், இந்த சம்பவம் காரணமாக பதற்றத்தில் இருப்பதாகவும், நன்றாக தூங்க முடிய வில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், 40 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள Leroy Robinson ஒரு கால்பந்தாட்ட வீரர் எனவும் Aston Villa மற்றும் West Bromwich Albion அணிக்காக விளையாடியதாக கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website