கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.08 கோடியாக உயர்வு!

February 20, 2021 at 7:13 am
pc

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 110,822,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 85,764,315 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 51 ஆயிரத்து 402 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 22,605,028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,529 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 28,523,524

இந்தியா – பாதிப்பு- 10,962,189

பிரேசில் – பாதிப்பு – 10,030,626

ரஷ்யா – பாதிப்பு – 4,125,598

இங்கிலாந்து – பாதிப்பு – 4,083,242

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website