பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா: வெளியான அதிர்ச்சி தகவல்!

June 8, 2021 at 7:22 am
pc

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஆய்வாளர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் ஆய்வாளர்கள் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தீநுண்மியால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள 36 வயதுப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

2006-ஆம் ஆண்டு முதல் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு உடலில் நோய் எதிா்ப்பாற்றல் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

இந்தச் சூழலில், 216 நாள்களாக அவரது உடலில் கொரோனா தீநுண்மி 32 வகைகளாக உருமாறியது.

அதில் பிரித்தானிய, தென் ஆப்பிரிக்கா வகைகளும் அடங்கும் என்று கூறியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website