அட கடவுளே – இலவச சேவையை நிறுத்திய கூகுள்!

July 16, 2021 at 9:02 am
pc

கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு சேவையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது.

இதனிடையே, தற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது.

முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website