பிரதமருக்கே அபராதமாக விதித்த அரசாங்கம்: வெளியான காரணம்!

April 12, 2021 at 7:57 am
pc

நார்வே அரசாங்கம் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதற்காக அந்நாட்டின் பிரதமருக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. பிரபல ஐரோப்பிய நாடான நார்வேயில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான விதிகள் அமுல்படுத்தபட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் ஒரு பொதுவெளி நிகழ்வில் அதிகபட்சம் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என்பது விதி.

ஆனால், கடந்த மாதம் அந்நாட்டின் பிரதமர் Erna Solberg தனது 60-வது பிறந்தநாளை கொண்டாட குடும்ப உறுப்பினர்கள் அழைத்து விருந்து வைத்துள்ளார். அதில் 13 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனால் அவர்மீது நாட்டின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு 20,000 நோர்வே க்ரௌண்ஸ் (சுமார் 2,352 டொலர்) அபராதம் விதிக்கப்பட்டது.

Erna Solberg மருத்துவமனைக்கு சென்றதால், அந்த இரவு விருந்தில் அவரே கலந்து கொள்ளவில்லை, இருப்பினும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை கொண்டுள்ளார் என பொலிசார் கூறினார்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, Erna Solberg பகிரங்கமாக மன்னிப்பு கோரியதோடு, அபராதம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website