“13 பேய் படங்கள் பார்த்தால் 95,000 பரிசு”… பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!

September 15, 2021 at 12:17 pm
pc

அமெரிக்காவில் உள்ள ஃபைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் ஒன்று அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களைப் பார்க்கும் நபர்களுக்கு 1,300 டாலர் ( 95ஆயிரம் ரூபாய்) பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம், ‘குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்தை விட, அதிக பட்ஜெட் எடுக்கப்படும் திகில் திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை ஏற்படுத்துகிறதா, இல்லையா என்பதை அறியவே இதுபோன்ற ஒரு போட்டியை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த போட்டிகளின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

ஹாரர் ஃபெஸ்ட் பார்க்கும் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்களின் பட்டியல் இவைதான்: Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious, The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle.

இந்த படங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தகுதியையும் ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website