50 கோடி பேர் வேறு App-க்கு தாவல்.., Watsapp-க்கு மிக பெரிய இழப்பு

January 13, 2021 at 4:04 pm
pc

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் தனிநபர் கொள்கை புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய அப்டேட்டுக்கு
ஒத்துழைக்காதவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என தடை விதிக்கப்பட்டது. புதிய கொள்கை புதுப்பிப்பு தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

Watsapp தகவல்கள் பேஸ்புக்குடன் பகிரப்படும் என அச்சம் நிலவியதால் பலர் டெலிகிராம், சிக்னல் போன்ற பிற ஆப்களை நாடத் துவங்கினர். வாட்ஸ் -அப்பில் ரகசிய தகவல் பகிர்வு சர்ச்சையால் டெலிகிராமில் உலகம்
முழுவதும் 50 கோடி பயனாளர்கள் இணைந்தனர்.

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேருக்கு மேல் டெலிகிராமில் இணைந்தனர். டெலிகிராம் ஆப் 2013ல் நிகோலாய் வலேரியேவிச் துரோவ் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

டெலிகிராம் Android, iOS, Mac மற்றும் Windows-இல் அணுக கிடைக்கும் ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இந்த ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரிக்கிறது. டெலிகிராமில் உள்ள அனைத்து மெசேஜ்களும், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளும் எண்ட் டூ எண்ட் பாதுகாப்பு வசதிகள் உள்ளன எனப்து குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சியை கண்ட வாட்ஸ் ஆப் நிர்வாகம் நேற்று வெளியிட்ட ‘கொள்கை புதுப்பிப்பு எந்த வகையிலும் தனிநபர்
சுதந்திரத்தை பாதிக்காது. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் நீங்கள் மேற்கொண்ட தகவல்கள் எதுவும் கண்காணிக்கப்படாது. நீங்கள் ஷேர் செய்த லொகேஷனை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கால் பார்க்க முடியாது. பேஸ்புக்குடன் உங்கள் தொடர்புகளை வாட்ஸ்அப் பகிராது என கூறியது. இப்போது வாட்சப் வீழ்ச்சி தடுக்க முடியாத நிலையில் உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website