செய்ததவரை போதும்!! இனி ஒரு ‘போர்’ செய்ய தயாராக இல்லை, அமைதி மட்டும் போதும் – இம்ரான்கான் ஒபென்டாக் !!

January 11, 2020 at 8:54 am
pc

பாகிஸ்தான் இனி போரில் ஈடுபடாது. இருநாடுகளுக்கு இடையேயான மோதலை தவிர்த்து, நட்புணர்வை முன்னெடுப்போம் என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த 3ம் தேதி ஆளில்லா டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில், ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸிம் சுலைமான் உள்பட 6 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஈரானை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. குவாஸிம் சுலைமானி முக்கிய தலைவர் என்பதால் ஈரான் நாட்டல் அதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே ஈரான் – அமெரிக்கா இடையே வார்த்தை போர் முற்றியது, இருதரப்பும் கண்டனத்தை முன்வைத்தன. இந்த போர் பதற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் கதிகலங்கியுள்ளது. பிரச்சனைகள் ஒரு புறம் முற்றிக்கொண்டே செல்ல, இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை பேசி சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவருமாறு உலக நாடுகள் மறுபுறம் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை குறித்து பேசிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறியதாவது, “இதற்கு முன்னர், உலக நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர்களில் பாகிஸ்தான் பங்கெடுத்து பெரும் தவறை செய்துவிட்டது. ஆனால் இந்த விஷயத்தில் நாங்கள் தவறை செய்யப்போவதில்லை. பாகிஸ்தான் இனி எந்த போரிலும் பங்கேற்காது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை கொண்டுவர முயற்சியை மேற்கொள்வோம்” என தெரிவித்தார். மேலும் ஈரான், அமெரிக்கா சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு சென்று, அந்நாடுகளின் தலைவர்களை சந்தித்து நாடுகளுக்கு இடையே அமைதியையையும், நட்புறவையும் ஏற்படுத்த முயற்சிப்போம் என தெரிவித்தார். அமெரிக்கா – ஈரான் இடையேயான சர்ச்சைகளை களைய, பாகிஸ்தான் உதவி செய்ய தயாராக உள்ளது. ஆனால் போரில் மட்டும் பங்கேற்காது. இனி நட்புறவை மீட்டெடுப்பதை தான் முக்கியத்துவமாக கருதுவோம் என இம்ரான் கான் தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website