அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
நடிகை அனுஷ்காவின் 50வது படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கி வருவதாகவும் 14 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு ’சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’ரெண்டு’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார்.
அதன் பின் தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் வெளியாகி ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் திரை உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை பூர்த்தி செய்ய இருக்கும் அனுஷ்கா தனது 50வது படம் என்ற மைல்கல்லை தற்போது தொட்டு உள்ளார். அவரது 50வது படம் தற்போது உருவாகி வருவதாகவும் இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் என்பவர் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு அனுஷ்கா நடித்த ’வேதம்’ என்ற தெலுங்கு படத்தை கிரிஷ் இயக்கிய நிலையில் 14 கழித்து மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘லீலாவதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசாவில் நடைபெற்று வருவதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.