17 வயது சிறுவனால் குழந்தை பெற்றெடுத்த 17 வயது சிறுமி ..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இவ்வாறு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த நிலையில், சிறுமி கருவுற்றிருக்கிறார்.
இதனிடையே கடந்த வாரம் சிறுமி தனது வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்தது. 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த போலீசார், இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் சிறுமி மற்றும் குழந்தை இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.