தேனி

ஆசையா இருக்கு.. வர்றீங்களா? ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்

Quick Share

தேனி மாவட்டம் பத்ரகாளிபுரத்தைச் சேந்தவர் ராஜேஸ்வரி. கணவர் மற்றும் இரண்டு மகன்கன்களுடன் வசித்து வரும் இவரை, திண்டுக்கல்லைச் சேர்ந்த இவரது தோழி ஒருவர், அணுகியுள்ளார். அப்போது அந்த தோழி, தேனியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தனக்கு ஃபேஸ்புக் வழியாக ஆபாச மெஸ்ஸேஜ் செய்து தொல்லை
கொடுப்பதாக வந்து ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு தான், ஃபேஸ்புக்கில் தனக்கு தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை துணிச்சலாக ராஜேஸ்வரி மிக லாவகமாக போலீசாரிடம் பிடித்துக்
கொடுத்துள்ளார்.

தனக்கு facebook-ல் ஆபாச புகைப்படத்தை அனுப்பி தொல்லை கொடுக்கும் இளைஞர் பற்றி ராஜேரிவரியிடம் அந்த திண்டுக்கல் தோழி கூறியுள்ளார்.தோழியின் பிரச்சனையை தீர்த்துவைக்க களமிறங்கிய இராஜேஸ்வரி, சம்மந்தப்பட்ட பிரச்சனைக்குரிய அந்த இளைஞரின் ஆர்டிஸ் பாண்டி என்கிற முகநூல் ஐடிக்கு மெசேஜ்
அனுப்பியுள்ளார்.

அந்த இளைஞரும் வழிந்துகொண்டே தனது பாணியில் ஆபாச மெசேஜ்களை ராஜேஸ்வரிக்கு அனுப்ப, ராஜேஸ்வரியோ அந்த இளைஞரை நேரில் பார்க்க வேண்டும் என மெசேஜ் அனுப்பி தன் ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். ராஜேஸ்வரியை சந்திக்க வந்த அந்த இளைஞரை கையும் களவுமாக, தனது கணவர், தாயார் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ராஜேஸ்வரி பிடித்துள்ளார். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்’ என அனைவரது காலிலும் விழுந்து கதறியுள்ளார்.

செம்ம அடி கொடுத்ததில் இளைஞர் தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அத்துடன் அவருடைய செல்போனை பரிசோதித்து பார்த்தபோது அவர் முகநூல் வழியாக பல பெண்களுக்கு இப்படி ஆபாச படங்கள் அனுப்பி கைவரியைசைக் காட்டுவதையே வேலையாகக் கொண்டு வந்துள்ளார். ஆனால், அவரை போலீஸில் ஒப்படைக்காமல், தர்ம அடியுடன் விட்டுவிட்டனர். எனினும் ராஜேஸ்வரியின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மனைவியின் கள்ள காதலை கண்டுபிடித்த கணவர்..,

Quick Share

தமிழகத்தில் தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர்.

கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். இது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர். நவம்பர் 2-ஆம் தேதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின்
மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தேடிப்பார்த்த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் தேதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் காணவில்லை என புகார் அளித்தார். நவம்பர் 7-ஆம் தேதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துக்காளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் கலையரசியிடம் விசாரித்தபோது உண்மை வெளியே வந்தது. கலையரசி கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனைதீர்த்துக்கட்டிவிடலாம் என‌ முடிவுசெய்து தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கனவனை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார். கொலை சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திட்டம் போட்டு கணவனை கொன்ற கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அதன்படி, நீதிமன்ற காவலில் இருந்த கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கல்யாணம் செய்துகொண்ட Homosex காதலன்.., வெறியில் முதியவரை செய்த இளைஞர் !!

Quick Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர் பொன்ராம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். வீட்டில் இறந்த நிலையில் அவரது ஆடை கலைந்திருந்ததால் சந்தேகமடைந்த மகள் மாரியம்மாள், தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வோர் பற்றி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்
தொழிலாளி 26 வயதான அருண்குமார் சிக்கினார்.

போலீசார் விசாரித்தபோது தான்தான் முதியவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். நண்பருக்குத் திருமணமான நிலையில் அருண்குமார் தவித்து
வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில், முதியவர் வீட்டுப் பக்கம் சென்ற அருண்குமார், முதியவரிடம் தவறாக நடக்க முயன்றார். முதியவர் பொன்ராம் அப்போது சத்தம்போட்டுள்ளார். பயத்தில் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்துள்ளார் அருண்குமார். இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி ஓரின சேர்க்கைகளின் கொடூர கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு சாகும் வரை தூக்கு

Quick Share

தேனி மாவட்டம், சின்னமனூரை அடுத்துள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்வரின் மகன் சுரேஷ் என்பவர் கற்பகவள்ளி (19) கற்பகவள்ளிக்கு 14 வயதானபோதே சுரேஷ் இவரை திருமணம் செய்தார், சுரேஷ் கற்பகவள்ளி தம்பதிக்கு திவ்யசுந்தரி, மற்றும் சுந்தரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், 2015ல் சம்பவம் நடந்த போது கற்பகவள்ளி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார், கற்பகவள்ளி மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அவருக்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார், இதை தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21ஆம் தேதி சுரேஷ் கற்பகவள்ளியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.

இதையடுத்து அவரை கடுமையாக தாக்கிய சுரேஷ் கற்பகவள்ளியின் தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார், அதன் பின்பு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடியுள்ளார், கற்பகவள்ளி இறந்ததை உறுதி செய்த மருத்தவர்கள் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், பிரோத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கற்பகவள்ளியின் வயிற்று பகுதியில் பலமாக அடித்தில் அவரின் கருவும் கலைந்தது. இதை தொடர்ந்து சுரேஷின் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிருபணமாகியது, வழக்கு விசாரனை முடிவடைந்த நிலையில் நீதிபதி அப்துல் காதர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார், அதில் சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் 302 மற்றும் 316-ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது,. 302-வது சட்டப்பிரிவின் கீழ் சாகும் வரை தூக்கிலிடட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
You cannot copy content of this Website