நீலகிரி

1000 அடி பள்ளத்தில் குதித்து பெண் தற்கொலை; அதிர்ந்த சுற்றுலா பயணிகள்..

Quick Share

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் மலை உச்சியில் இருந்து மூதாட்டி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்த போது, அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்குச் சென்ற பெண் ஒருவர் திடீரென கீழே குதித்துள்ளார். அதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பா இடத்திற்கு விரைந்த உதகை வனத்துறையினர், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் 350 அடி பள்ளத்தில் இருந்து அந்த பெண்ணை சடலமாக மீட்டெடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோவையை சேர்ந்த 63 வயதான மூதாட்டி லீலாவதி என்பது தெரிய வந்துள்ளது.அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்வதாக கூறியதை நம்பி பணம், வைரங்களை இழந்த லண்டன் பெண்!நீலகிரி மாவட்டத்தில்அத...

Quick Share

லண்டனை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம், நகைகளை மோசடி செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனை சேர்ந்தவர் பார்பரா எலிசபெத் (67). இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதன்படி எலிசபெத்தின் தாத்தா, பாட்டி சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா வந்துள்ளனர். 

அப்போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வசித்த பிரிட்டிஷ் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. பிரித்தானிய அரசு குடும்பத்திற்கு பார்பரா எலிசபெத்தின் குடும்பம் நெருக்கமானவர்கள் எனவும், இவரது சகோதரர் லண்டன் முன்னாள் மேயராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் மசினங்குடியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு வீடுகள் உடன் கூடிய இரண்டு ஏக்கர் நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

லண்டனில் இருந்து அவ்வபோது நீலகிரிக்கு வரும் எலிசபெத் தனது நிலங்களை கவனித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த போது ஆங்கிலோ-இந்தியனான டொனால்ட் ஆலென் பார்கலே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தனியாக வசித்த எலிசபெத்தை காதல் வலையில் வீழ்த்திய டொனால்ட் பார்கலே திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாகவும், அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். 

இதனால் இங்கிலாந்து பெண்ணின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் இருந்து 25 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து விட்டதாகவும், மேலும், இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை நம்பி லட்சக்கணக்கில் மதிப்புடைய வைரம், பிளாட்டினம் நகைகளை டொனால்ட் ஆலென் பார்கவே வாங்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் தன்னை மோசடி செய்வதை உணர்ந்ததால் தான் விலகிவிட்டதாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்துவிட்டதாக தனது பெயரை, தனது கணவன் எனக்கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.  

மேலும் டொனால்ட் ஆலென் பார்கலே மூலம் அறிமுகமான மார்கஸ் என்ற நபரும் மசினகுடியில் உள்ள பழங்குடி மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தரலாம் என தன்னிடம் கூறிவிட்டு தனது பெயர் மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள எலிசபெத், அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் மீது பொலிசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – பரபரப்பான கடைசி நிமிட காட்சிகள்..!!!

Quick Share

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத் திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தை கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரால் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கும் பனிமூட்டம் பரவி இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியது.

இதையடுத்து அதன் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதியது. தொடர்ந்து மற்றொரு மரத்திலும் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்த அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். ஆனால் ஹெலிகாப்டர் டமார், டமார் என்ற சத்தத்துடன் வெடித்துக்கொண்டு இருந்ததால், அதற்குள் வெடிபொருட்கள் இருக்கலாம் என்று பயந்து பொது மக்கள் அருகில் செல்லவில்லை.

உடனே அவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரையே வாகனங்கள் செல்ல முடியும்.

எனவே அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங் கள் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து உள்ளே சென்ற மீட்பு படையை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை துணியில் கட்டி டோலி போன்று தூக்கியபடி ஆம்புலன்ஸ் நின்ற பகுதிக்கு கொண்டு வந்தனர். 

இந்த ஹெலிகாப்டர் ஒயிட் பெட்ரோலில் இயங்கக்கூடியது என்பதால் தீப்பிடித்து எரிந்ததும் மளமளவென எரிந்தது. சுமார் 40 அடி உயரத்துக்கு தீ எரிந்தது. அத்துடன் பல அடி உயரத்துக்கு கரும்புகை சென்றது. இதில் அங்கிருந்த 40 அடி உயரமான 3 மரங்களும் சேதமானது. சுமார் 3 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்னர் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கும் முன்னர் அப்பகுதியில் சுற்றுலா சென்ற ஒருவர் அந்த விபத்தை தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். உதகை மலை ரெயில் இருப்புப் பாதையில் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தினர், அப்பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஹெலிகாப்டர் பலத்த சத்தத்துடன் அவர்களை கடந்து செல்கிறது. அப்போது அந்த பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதை காண முடிகிறது. சுற்றிலும் வெண்புகையாக காட்சியளிக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் இஞ்சினில் இருந்து வரும் சப்தம் வித்யாசமாகவும் இருக்கிறது.

ஹெலிகாப்டர் பறந்து சென்றது இயல்புக்கு மாறாக இருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை திரும்பிப் வானில் பார்க்கின்றனர், ஹெலிகாப்டர் தரையில் மோதியதைப் போல சத்தம் கேட்டதால், “என்னாச்சு உடஞ்சிருச்சா?” என ஒருவர் கேட்க அதற்கு வீடியோ எடுப்பவர் ஆமாம் என பதில் தருகிறார்.

விபத்துக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

Quick Share

நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் மகனுக்கு கொரோனா உறுதியானதால், கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பியபோது, அவரை வழியனுப்பவும் அவர் வரவில்லை.

இந்நிலையில், இன்னசென்ட் திவ்யாவிற்கும் கொரோனா தொற்று உறுதுி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

‘உயிருடன் பிடிபட்டது T23 புலி’நிம்மதி பெருமூச்சுவிட்ட மசினகுடி!

Quick Share

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

இரவு 9:30 மணிக்கு தெப்பகாடு – மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.

இந்நிலையில், அந்த புலிக்கு நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் இன்று பிற்பகல் கூட்டுப்பாறை பகுதியில், புலி தென்பட்டது.

இதனையடுத்து தற்போது அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர், தங்களது கட்டுப்பாட்டிற்குள் புலியை கொண்டு வந்துள்ளனர். புலி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அதனை பிடித்து கூண்டில் ஏற்றினர்.

மிருகத்தனமாக நடந்து கொண்ட மாந்தர்கள்.., கண்கலங்க வைத்த சம்பவம்

Quick Share

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் பல மாதங்களாக சுற்றி வந்தது. வனத்துறையினர் அதற்கு பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கி வந்தனர்.

உடல் நிலை குணமாகாத அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தான் கடந்த 19- ம் தேதி இந்த காட்டு யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மசினகுடி மாவனல்லா பகுதியில் அந்த யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியதும், இதில் பிரசாத் (வயது 36), ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர்
ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டுயானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சம்மந்தப்பட்ட தனியார் விடுதிக்கு வனத்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website