பெரம்பலூர்

அனிருத்தை திருமணம் செய்ய போகிறாரா கீர்த்தி சுரேஷ்…கசிந்த தகவல்!!

Quick Share

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதனிடையே பிரபல இசை அமைப்பாளர் அனிருத் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் பரவின.

கீர்த்தி சுரேஷும்,அனிருத்தும நல்ல நண்பர்களா பழகி வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் அனிருத் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபருக்கு கொடுத்த பெண்… இப்படியும் நடக்குதா?

Quick Share

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). பொறியியல் பட்டதாரியான இவர் அப்பகுதியில் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் செல்வத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணின் 10ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி மீது தவறான ஆசை ஏற்பட்டுள்ளது. 

அதனை நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்ட செல்வம் அவரது உறவுக்கார பெண்ணான மலர்க்கொடி (45) என்பவரை நாடியுள்ளார். அதன்படி சிறுமியின் தாய் குளித்துக்கொண்டிருப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த மலர்க்கொடி அதை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை சிறுமியின் தாயிடம் காட்டிய செல்வம், உனது மகள் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் மறுத்தால் இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் செல்வத்திடம் விசாரணை செய்தனர். அதில், சிறுமியின் தாய் எங்கே குளிப்பார், அவரை எங்கு நின்று வீடியோ எடுக்க வேண்டும் என்ற திட்டத்தை மலர்கொடிக்கு செல்வம் வகுத்து கொடுத்துள்ளார். அதன்படி, சம்பவத்தன்று சிறுமியின் தாய் குளிக்க சென்றுள்ளார். அப்போது கையில் செல்போனுடன் வந்த மலர்க்கொடி, சாவகாசமாக வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் செல்வத்தையும், உடந்தையாக இருந்த மலர்கொடியையும் கைது செய்துள்ளனர்.

பெண் குளிப்பதை பெண்ணே வீடியோ எடுத்து கொடுத்து வாலிபருக்கு உதவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மகளை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய கொடூரன்!!

Quick Share

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். 33 வயதான இவன் தனது பகுதியில் இருக்கும் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 

இந்த வீடியோ காட்டி, அந்த பெண்ணின் மகளை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் செல்வத்தின் செல்போனையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நெருங்கிய தோழிகள் காதல் !ஆணாக மாரி திருமணம் செய்து கொள்ள மாணவிகள் ஓட்டம் !!

Quick Share

பெரம்பலூர் அருகேயுள்ள ஒரு மலையடிவார கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த 17 வயதான இன்னொரு மாணவி பெரம்பலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். இருவரும் பக்கத்து ஊரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் படிக்கும்போது இருந்தே ஒன்றாகப் படித்து வந்த நெருங்கிய தோழிகளாவர்.  

இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்ற மாணவிகள், கல்லூரிக்கு போகாமலும், வீட்டுக்கும் திரும்பாமலும் மாயமாகிவிட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் அதில் ஒரு மாணவி பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் சென்னைக்கு சென்று விட்டதாக தெரியவந்தது. 

மேலும் சென்னை போரூர் ஓம் சக்தி நகரில் ஒருவரது வீட்டில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்து சென்ற தனிப்படை பெண் போலீசார் இரண்டு மாணவிகளையும் நேரில் விசாரித்தபோது ஆணாக மாறி வரும் மாணவியும் தோழியும் ஒன்றாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்திட முடிவு செய்து அதற்கு ஏற்றபடி தோற்றத்தில் ஆணாக முழுமையாக மாற்றிக்கொள்ளவே சென்னை வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் இருவரிடமும் நைசாகப் பேசி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இரு மாணவிகளுக்கும் சைல்டுலைன் அமைப்பின் மூலமாக கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

கிணற்றில் கிடந்த பெண்ணின் சடலம்! விசாரணையில் வெளிவந்த தகவல் …

Quick Share

பெரம்பலூர் டவுன் வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் செல்லமுத்து என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். 

கிணற்றின் அருகே முட்புதர்கள் அதிகமாக இருந்ததால் அந்த பெண்ணை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் முட்புதர்களை அகற்றி கிணற்றுக்குள் இறங்கி அந்த பெண்ணின் உடலை மீட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தச்சு தொழிலாளி சுரேஷ்குமார் மனைவி அஞ்சலை என்பது தெரியவந்தது. கடந்த 4-ந்தேதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்குமார், அஞ்சலையை காணவில்லை என புகார் செய்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில், அஞ்சலை பெரம்பலூர்-எளம்பலூர் சாலை ஆர்.எம்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், அவருக்கு மனநிலை சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அஞ்சலை கிணற்றை நோக்கி வந்த போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

நகைக்காக பாட்டியை கொன்ற பேரன்!

Quick Share

திருச்சூர் மாவட்டம் கடலாசேரி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி கவுசல்யா(வயது 78). வேலாயுதம் ஏற்கனவே இறந்துவிட்டதால், கவுசல்யா தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென கட்டிலில் பிணமாக கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர் ந்து கவுசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கவுசல்யா மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் அவர் அணிந்திருந்த 2 வளையல்கள் மற்றும் செயின் ஆகியவை காணாமல் போயிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கவுசல்யாவின் பேரன் கோகுல்(32) என்பவர் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோகுலை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கவுசல்யாவை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் குடிபோதைக்கு அடிமையான கோகுல் அடிக்கடி பணம் கேட்டு கவுசல்யாவை தொந்தரவு செய்து வந்ததும், சம்பவத்தன்று பணம் தராததால் அவர் அணிந்திருந்த நகையை திருட கொலை செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து திருச்சூர் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் !

Quick Share

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மனைவி வள்ளியம்மை (வயது 80). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  வள்ளியம்மை  தனது மகன் பழனிசாமி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வள்ளியம்மை இறவாங்குடி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்துள்ளார்.
தனது உறவினர் வீட்டில் உள்ள வள்ளியம்மை வயல்களுக்கு செல்வது ஆடுமாடுகளை கவனிப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். 
சம்பவத்தன்று இரை இல்லாமல் பட்டினியாக கிடந்த ஆடுகளை மேய்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை அழைத்து கொண்டு வள்ளியம்மை சென்றுள்ளார்.  அங்கு தனியாக இருந்த வள்ளியம்மையை  மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.  
பின்னர் நடு காட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியம்மையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மூதாட்டி வள்ளியம்மை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்ட போலீசார், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 

You cannot copy content of this Website