உலகம்

தலையில் இருக்கும் 3 கிலோ முடி சாப்பிட்ட பெண்!

Quick Share

சீனா நாட்டின், சான்ஷி மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அரிய வகை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் மண் மற்றும் பேப்பரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இந்த பெண்ணோ தலையில் இருக்கும் முடியை சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதனால் இவருக்கு வயிற்று வலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் முடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றிலிருந்து முடியை அகற்றினர். இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அவரது வயிற்றிலிருந்து 3 கிலோ முடி வெளியேற்றப்பட்டது.

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

Quick Share

மெக்சிகோ நாட்டில் வடகிழக்கு பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு வால் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தபோது, அந்த குழந்தைக்கு 2 இன்ச் வால் இருப்பது தெரிய வந்தது. அந்த வாலில் முடிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த வாலை மருத்துவர்கள் நீக்கினர். இதுபோன்ற சம்பவங்கள் அபூர்வமாக நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிலச்சரிவு -மொத்தமாக மண்ணில் புதையுண்ட 100 பேர்!!பேரழிவை ஏற்படுத்திய சம்பவம்

Quick Share

இத்தாலியின் இஷியா தீவில் பேய் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் மொத்தமாக 100 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி புதைந்து

இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து, மேலும் 13 பேர் நிலச்சரிவில் சிக்கி புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளத்துடன் சகதியும் கலந்துள்ளதால் அப்பகுதியில் குடியிருப்புகளும் மூழ்கியுள்ளன.

இஷியா நிலச்சரிவில் சிக்கி 8 பேர் புதைந்துபோயுள்ளதாக அரசு தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாயமானவர்கள் தொடர்பில் தீவிர தேடுதல்

உள்ளூர் நேரப்படி விடிகாலை 4 மணிக்கு பெருமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மாயமானவர்கள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நிலச்சரிவில் சிக்கியவர்களில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மிகவும் கடுமையாக இருப்பதால் உரிய நேரத்தில் உதவியை அளிக்க முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், இஷியாவில் வசிப்பவர்கள் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ஜார்ஜியா மெலோனி நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதாகவும் அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட தீவிர ரசிகர் செய்த வைரலான செயல்!

Quick Share

எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். 

இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு தொடர்ச்சியாக ஊழியர்கள் நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இன்று என்ன நடக்குமோ என அவரது நிறுவன ஊழியர்கள் பயந்து நடுங்கிவரும் நிலையில் எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர் ஒருவர், அவரின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்வார் என்ற கனவுடன் அந்த இளைஞர் இத்தகைய செயலைச் செய்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த இ ளைஞர் ரோட்ரிகோ. 

உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க்கால் இவர் அதிகம் கவரப்பட்டுள்ளார். இதனால், எலான் மஸ்க்கின் பெயரை அவரின் கனவுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுடன் சேர்த்து நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார்.

ரோட்ரிகோவுக்கு இன்ஸ்டாகிராமில் 490,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். இது தொடர்பாக இளைஞர் ரோட்ரிகோ பேசும்போது, எலான் மஸ்க் எனக்கானவர். அவர் மீதான என் அன்பை விவரிக்க முடியாது. அவர் என்ன செய்தாரோ, என்ன செய்ய இருக்கிறாரோ, அவை அனைத்தும் மக்களுக்கானது. 

அவர் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்லவுள்ளார். இதன் மூலம் அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். 

அவருடன் சேர்ந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட்டில் 2024ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு இவை அனைத்தும் தெரியும், நான் ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் அது மனிதகுலத்தின் நன்மைக்காக என்று அவளுக்குத் தெரியும் என கூறினார். கடந்த 2016ஆம் ஆண்டு வரை ரோட்ரிகோ பிரேசிலில் சிறைத் துறை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

புரூஸ் லீ மரணம் தொடர்பில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்!

Quick Share

தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய புரூஸ் லீ, 1973ஆம் ஆண்டு தனது 32வது வயதில் அகால மரணமடைந்தது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது புரூஸ் லீயின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. சீன கேங்ஸ்டர்களினால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒருபுறமும், பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று மறுபுறமும் என பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் அவரது மரணத்திற்கான உண்மை காரணம் தெரிய வரவில்லை.

இந்த நிலையில் Hyponatremia-வினால் புரூஸ் லீ இறந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, சிறுநீரகத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமை காரணமாக புருஸ் லீ உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் குழு The Clinical Kidney Journal-யில் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘அதிகப்படியான நீர் உட்கொள்ளல் சிறுநீரில் நீர் வெளியேற்றத்துடன் பொருந்தவில்லை என்றால் Hyponatremia ஏற்படும். இதன்மூலம் பெருமூளை வீக்கம் ஏற்பட்டு, சில மணிநேரங்களில் மரணத்திற்கு வழி வகுக்கும். லீயின் விடயத்தில் அப்படி தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

மேத்யூ பாலி எழுதிய புரூஸ் லீயின் சுயசரிதை புத்தகத்தில், அவர் இறந்த நாளில் தண்ணீரை அடிக்கடி குடித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சா பயன்பாடு தாகத்தை அதிகரிக்கும், எனவே புரூஸ் லீ அதனை பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அதிகப்படியான தண்ணீரைக் குடிக்க தூண்டியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் புரூஸ் லீயின் மரணம் குறித்த 49 ஆண்டுகால மர்மம் விலகிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நெருப்பு கோளமான விமானம்: மொத்த பயணிகளும் பலி

Quick Share

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மோதி விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 பேர்கள் உடல் கருகி பலி

கொலம்பியாவின் மெடலின் என்ற பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 8 பேர்கள் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெடலின் பகுதியில் உள்ள Olaya Herrera விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானமானது Pizarro பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர்.

இயந்திர கோளாறு

விபத்தையடுத்து அனைவரும் பலியாகியுள்ளதாக நகர மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

மேலும், விமானம் மோதியதும் மூன்று துண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானம் மோதியத்தில் 7 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு உரிய உதவிகளும் மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிட்டுள்ளதாக நகர மேயர் உறுதி அளித்துள்ளார்.

மக்களே எச்சரிக்கை!! சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா!

Quick Share

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் ஹைடன் மற்றும் சயோம் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீனா தலைநகரான பீஜிங்கில் நேற்று 316 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் 6 மாதத்திற்கு பிறகு கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தங்கமீன்!!தங்கமீனை பிடித்த பிரித்தானிய மீனவர்!

Quick Share

தி கேரட் (The Carrot) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட பிரமாண்டமான தங்கமீனின் எடை 30.5 கிலோகிராம் (67 பவுண்ட் 4 அவுன்ஸ்) ஆகும். இது 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஜேசன் ஃபுகேட்டால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தங்கமீனாகக் கருதப்பட்ட மீனை விட 13.6 கிலோ எடை அதிகம்.

எனவே இது இப்போது உலகின் மிகப்பெரிய தங்கமீன் என்ற புதிய உலக சாதனையை படைக்கலாம் என கூறப்படுகிறது.

பிரித்தானிய மீனவர்

பிரித்தானியாவைச் சேர்ந்த 42 வயதான Andy Hackett என்பவர், உலகின் தலைசிறந்த கெண்டை மீன் வளர்ப்பில் ஒன்றான பிரான்சின் ஷாம்பெயின் நகரில் உள்ள புளூவாட்டர் ஏரிகளில் (Bluewater Lake) மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தங்கமீனை பிடித்துள்ளார்.

இந்த மீன், பாரம்பரியமாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் தோல் கெண்டை மற்றும் கோய் கெண்டை மீனின் கலப்பினமாகும்.

அதிர்ஷ்டம்

இவ்வளவு பெரிய தங்கமீன் (கேரட்) உள்ளே இருப்பதை முன்பே எப்போதும் அறிந்திருந்ததாகவும், ஆனால் அதைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் Andy கூறினார். 

இந்த பிரமாண்ட தங்கமீனை துரத்திப் பிடிக்க அவர் 25 நிமிடங்கள் எடுத்தார். தனது தூண்டிலில் சிக்கியதும் அது ஒரு பெரிய மீன் என்று தெரிந்துகொண்ட அவர், அதைப் பிடித்தது முற்றிலும் தனது அதிர்ஷ்டம் தான் என கூறினார்.

இதற்கிடையில், ‘கேரட்’ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. புளூவாட்டர் லேக்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம், பிரமாண்டமான மீனை கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் Andyயின் மூன்று படங்களைப் பகிர்ந்துள்ளது

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு… பீதியில் மக்கள்!

Quick Share

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. 

இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. 

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தை! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட தகவல்

Quick Share

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தை

இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தை பெண். மற்றொரு குழந்தை ஆண் குழந்தையாகும். 

பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இஷாவும் குழந்தைகளும் நலம்

அதில், 19 நவம்பர் 2022ல் எங்கள் குழந்தைகளான இஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் இரட்டைக் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இஷாவும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இந்த மிக முக்கியமான கட்டத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… 20 பேர் உயிரிழப்பு!

Quick Share

இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. 

நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது

 

கஞ்சா நிறுவனங்களால் பெரும் இழப்பை சந்தித்த கனேடியர்கள்!

Quick Share

கஞ்சா விற்பனை நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு கனேடிய மக்கள் சுமார் 131 பில்லியன் டொலர்கள் தொகையை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது சராசரி ஆண்டு வருவாயை ஒப்பிடுகையில், ஒவ்வொரு கனேடிய குடிமகனும் தலா 43,000 டொலர் தொகையை இழப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் கனேடிய கஞ்சா தொழில் சரிவடைவதற்கு காரணம் பெடரல் அரசாங்கத்தின் புதிய விதிகள் தான் என முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரொறன்ரோவில் கஞ்சா பொருட்களுக்கான கடை ஒன்றை 2021 செப்டம்பரில் திறந்த கனேடியர் ஒருவர், கடும் நெருக்கடி காரணமாக ஒரே ஆண்டில் கடையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆனால் குறித்த கடையை அவர் குத்தகைக்கு எடுத்துள்ளதால், மாதம் 6,000 டொலர் என மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வாடகை செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமது கடைக்காக சுமார் 300,000 டொலர் செலவிட்டதாக கூறும் அவர், திவால்தான் இதிலிருந்து வெளியேற ஒரே வழி என தெரிவித்துள்ளார். உரிமம் பெறுவதற்காக மட்டும் 10,000 டொலர் செலவிட்டதாக கூறும் அவர், ஊழியர்களுக்கு ஊதியம் உட்பட எஞ்சிய செலவுகள் எதையும் உட்படுத்தாமல் 280,000 டொலர் செலவானதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடா அரசாங்கமே இப்படியான ஒரு தொழிலை ஊக்குவித்ததுடன், தற்போது அதன் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் முதலீட்டாளர்கள்.
You cannot copy content of this Website