கோவை

உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

Quick Share

கோவை இடையர்பாளையம் டிவி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49). இவரது மனைவி கிரேஸ் பியூலா (33). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலா சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட், கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதை அடுத்து மீண்டும் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் வெட்டியுள்ளார். இதைக் கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அப்போது கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் அழைத்து தகவலை கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தை; குவியும் பாராட்டுக்கள்…!!

Quick Share

கோவை இடையார்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் கீர்த்திக்குமரன். இவரது மனைவி சுகன்யா லட்சுமி.

இவர்களின் 1 வயது 4 மாத குழந்தை சக்தி கந்தராஜ்.

குழந்தை சக்தி கந்தராஜ் தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை (பிளாஸ் கார்ஸ்) சரியாக சுட்டி காட்டி வியக்க வைத்து கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

கலாம் உலக சாதனை புத்தகம் சார்பில் குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி ‘எக்ஸ்ட்ராடினரி கிரஸ்பிங் பவர் ஜெனியூன் கிட்’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்து உள்ளது.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தையை உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்

மூதாட்டியிடம் நகையை பறித்து சென்று சிக்கிய காதலர்கள்.. என்ஜினீயரிங் மாணவர்கள் …!!

Quick Share

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே வழக்கம்போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் காளியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஒரு முகவரியை கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். இந்த சம்பவம் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனை சேர்ந்த பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி 72 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்...

Quick Share

17 வயது சிறுமி ஒருவர் 72 வயது மூதாட்டியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

72 வயது முதியவர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி(72). இவருக்கு செந்தில்வேல் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். 

அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மூதாட்டி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.

கழுத்தை நெறித்து கொலை

வீட்டுக்கு வந்து செந்தில்வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிக்கிய 17 வயது சிறுமி

கண்காணிப்ப கேமரா காட்சிகள் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்று ஒரு மணி நேரமாக திரும்பி வராதது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டதால், மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சிறுமி திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

Quick Share

கோவை கிணத்துக்கடவு அருகே 6 ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கிட்டனம்மாள். பழனி கூலித்தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண்களும் ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) ஆகிய 2 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர். 

இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஈஸ்வரன் 8-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில்  ஈஸ்வரனும், அர்ஜுனனும் அடிக்கடி செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாடுவது சம்பந்தமாக சண்டை போட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாட இருவரும் செல்போனுக்காக சண்டை போட்டனர். இதில் அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்றில் குத்த முயற்சித்துள்ளான். இவர்களது அம்மா கிட்டனம்மாள் அதை பிடுங்கி சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டனர். இருவரையும் அக்கா வேப்பிலைக்காரி சமாதனம் செய்துள்ளார். 
அப்போது கோபமடைந்த அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று ஜன்னலில் தூக்குபோட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுனன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் சாவுக்கு காரணம் செல்போனில் கேம் விளையாடும் போது ஏற்ப்பட்ட தகறாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கட்டப்பையில் வைத்து வீசப்பட்ட 10 நாள் பச்சிளங்குழந்தை !

Quick Share

கோவையில் கட்டைப்பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில், ராஜகணபதி கோவில் உள்ளது. 

இந்த கோவிலில், பிறந்து சில தினங்களே ஆன குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பீளமேடு காவல்துறையினரும், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர்.

இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. 

அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குழந்தையை பையில் வைத்து விட்டுச் சென்றவர்கள் யார்..? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல்காரரை நிர்வாணமாக்கி கல்லூரி மாணவர்கள் செய்த அட்டூழியம்…

Quick Share

சமையல்காரரரை நிர்வாணமாக்கி கல்லூரி மாணவர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன்(34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். 

ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

தனிமையில் இருப்பதற்கு ரயில்வே தண்டவாளத்திற்கு பின்னே வரக்கோரிய இளைஞரின் அழைப்பினை ஏற்று கங்காதரன் குறித்த இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் கத்தியால் கங்காதரனை மிரட்டி அவரை நிர்வாணப்படுத்தி காணொளி எடுத்ததோடு, அவ்வப்போது காணொளியை காண்பித்து மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளனர்.

பின்பு கங்காதரன் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) ஆகியோர் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதில் பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்த பொலிசார் தலைமறைவாக இருக்கும் மாணிக்கத்தை் தேடி வருகின்றனர்.

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி! அதிர்ச்ச...

Quick Share

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவர் அதே பகுதியில் பாம்பு பிடிப்பது மற்றும் கால்நடைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. தையல் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் மற்றும் நட்சத்திரா என இரு குழந்தைகள் உள்ளனர்.

வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று இரவும் வினோத்குமார் குடித்துவிட்டு வந்து எனது மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முத்திப்போகவே ஆத்திரமடைந்த மகாலட்சுமி தான் தையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து கணவரை நெஞ்சில் ஆழமாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தால் வினோத்குமார் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த வினோத்குமாரை நீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வினோத்குமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி உடனடியாக வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரண் அடைந்தார். தற்போது காவல்துறையினர் மகாலட்சுமி கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகமடைந்த கணவரை ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் !…ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அ...

Quick Share

மொபைல் ஆப் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல், அவர்களை நிர்வாணபடுத்தி வீடியோ எடுப்பதும், சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒரு மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (34).

இவர் கோவையிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். கங்காதரன் தன்னுடைய செல்போனில் ஓரினைச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் (BLUED APP) செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த செயலி மூலம் கங்காதரனை தொடர்பு கொண்ட பிரசாந்த், ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். சாய்பாபா காலனி பகுதியிலுள்ள தனியார் மருத்துவனையின் பின்புறம் உள்ள ரயில்பாதை அருகே பிரசாந்த், தனது நண்பர்களான நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

நள்ளிரவு 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கங்காதரன்- பிரசாந்த் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அதை மறைந்திருந்த நிசாந்த் மற்றும் மாணிக்கம் இருவரும் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய மூவரும், கங்காதரனை தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் கையிலிருந்த 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசில் தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் இருந்த கங்காதரன் சம்பவம் தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 397 (கொலை அல்லது கொடூரமான காயத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் கொள்ளை அல்லது கொள்ளை) மற்றும் 506 (ii) (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு பதிவு செய்த போலீசார் மூன்று இளைஞர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாந்த் மற்றும் நிசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிவானந்தா காலனி பகுதியைச் பிரசாந்த் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியிலும், நிசாந்த் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மூன்று மாணவர்களும் இணைந்து பிரபல ஒரின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து ஓரின சேர்க்கைகு அழைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதோடு அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை, இதேபோன்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மருந்தாளுநரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளதும் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நடத்தையில் சந்தேகம்.. திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை குத்திக் கொன்ற கொடூரன்!

Quick Share

கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில் கோவை சுந்தராபுரம், காந்திநகர் 3வது வீதியை சேர்ந்தவர் நாகார்ஜுனன் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சர்மிளா (27). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். 

இந்த நிலையில் நாகார்ஜுனனுக்கு குடிபழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் காதல் மனைவியின் நடத்தையிலும் நாகார்ஜுனன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நாகார்ஜுனன், அங்கு கிடந்த கத்தியால் காதல் மனைவி சர்மிளாவை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, மார்பு, வயிறு உள்பட 8 இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்ததில் சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து வீட்டைவிட்டு நாகார்ஜுனன் தப்பிச்சென்றுவிட்டதால் சர்மிளா வீட்டில் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் மீண்டும் மதுகுடித்த நாகார்ஜுனன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். அதன்பின்னர் தான் மற்றவர்களுக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த நாகார்ஜுனனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சர்மிளாவுக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடந்து வருகிறது. நடத்தையில் சந்தேகம் காரணமாக திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை கணவர் குத்திக்கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் !

Quick Share

கோவையில் குடும்ப தகராறில் பெண் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டீ மாஸ்டர்
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நேரு பூங்கா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணேசன் (வயது 55). இவர் சிங்காநல்லூர் திருச்சி சாலை சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னுத்தாய் (46). இவர்களுக்கு மதன்குமார் (24), அருண்குமார் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மதன்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அருண்குமார் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கும் அவருடைய மனைவி பொன்னுத்தாயிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் கணேசன் கடந்த 2 வாரமாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம்போல் கணேசன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் கணேசன் அங்கு இருந்து தப்பி சென்றார். இதற்கிடையே வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மகன் மதன்குமார், அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர்.
கணவர் கைது
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கணேசனை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக சிங்காநல்லூர் பகுதியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர்! மாணவிகள் இருவரையும்...

Quick Share

கோவையில் இருந்து குமரி வரை காதல் வேட்டை நடத்தி 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிதி நிறுவனம் தொடங்கி, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததால் மணிமாறன் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

மாணவிக்கு டியூசன்

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 11-ம் வகுப்பு படிக்கும் தனது 16 வயது மகளை கணித பாடம் கற்றுக்கொடுக்கும்படி மணிமாறனிடம் டியூசனுக்கு அனுப்பியுள்ளார். அந்த மாணவியிடம் மணிமாறன் தனது மன்மத சேட்டையை காட்டினார். இதையடுத்து தனது வலையில் சிக்கிய அந்த மாணவியை மணிமாறன் கடத்தி சென்றார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மேலும் மணிமாறனை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றிய மணிமாறன் போலீசார் கண்களில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார்.

பின்னர் அந்த மாணவியுடன் குமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கு சென்றார். அங்கு இருவரும் புதுமண தம்பதி என்று கூறி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கல்லூரி மாணவியையும் வீழ்த்திய காதல் மன்னன்

இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகளான 2-ம் ஆண்டு கல்லூரி மாணவியை மணிமாறன் காதல் வலை வீசி மயக்கினார். அந்த மாணவியையும் கடத்தி மணிமாறன் தலைமறைவானார்.

இதற்கிடையே கல்லூரி மாணவி காணாததால் அவரின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி சுசீந்தரம் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அந்த 2 மாணவிகளையும் கடத்திய மணிமாறன் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

திருப்பதியில் கைது

இந்த நிலையில் மணிமாறன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படையினர் திருப்பதி சென்று மணிமாறனை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.

மணிமாறன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மணிமாறன் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பதும், அந்த பெண்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனை பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மாணவிகளை கடத்தி சென்று சுற்றியபோது போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மணிமாறன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வந்துள்ளார்.

வீதி, வீதியாக டீ விற்ற கல்லூரி மாணவி

மணிமாறன் திருப்பதியில் தங்கி இருந்தபோது கல்லூரி மாணவி வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம், நகைகள் விரைவாக காலியானது. இதனால் செலவுக்கு பணம் இன்றி தவித்த மணிமாறன், கல்லூரி மாணவியை டீ விற்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். வேறு வழியின்றி அந்த கல்லூரி மாணவியும் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்பனை செய்து உள்ளார். இதனிடையே பணத்தேவை காரணமாக மாணவிகள் இருவரையும் விபசாரத்தில் தள்ள மணிமாறன் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது
You cannot copy content of this Website