சென்னை

தவறான அறுவை சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை மரணம்!

Quick Share

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். 

கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். 

இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. 

இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார். 

மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களே உஷார்!! பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் பெண் பலி!

Quick Share

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 53 வயது தம்புசாமி மற்றும் அவரது 47 மனைவி பவானி ஆகியோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று அங்கு பிரியாணி சாப்பிடனர். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு காரணமாக பவானி உயிரிழந்தார். இதனால், சோகத்தில் இருந்த அவரது கணவர் தம்புசாமி, மனைவியின் இறுதிச் சடங்கிற்கு முன்பே திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த பேத்திக்கே பாலியல் தொல்லை.. திமுக கவுன்சிலரின் கணவர் மீது பரபரப்பு புகார்..!

Quick Share

சென்னை தண்டையார்பேட்டை மின்ட் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர் தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், 11 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகளுக்கு மாமனார் பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகன் சார்லஸ் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் கூறியதாவது; எனது மாமியார் வேளாங்கண்ணி தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். அவரது கணவரான எனது மாமனார் பாண்டியன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பிரியதர்ஷினியிடம் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலரின் கணவன் என்பதால் அலட்சியம் காட்டுவதாக சார்லஸ் குற்றம்சாட்டினார். 

மேலும், தனது மாமனாரே சொந்த பேத்திக்கு பாலியல் சீண்டல் செய்து உள்ளது உண்மை என்று எனது மகள் கூறியும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனவும் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்டால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்றும் தண்டையார்பேட்டை மகளிர் அணி காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மிரட்டுகிறார்.

இதனால், புகார் குறித்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மீதும், தனது திமுக கவுன்சிலரின் கணவரான பாண்டியன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளாக பாதிக்கப்பட்டவரின் தகப்பனார் சார்லஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விடிந்தால் திருமணம்… இரவில் புது மாப்பிள்ளை மர்ம மரணம்!!

Quick Share

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் 30 வயது சுரேஷ் குமார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று வீடுகள், நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியைச் செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. 

அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது மணமகன் சுரேஷ்குமார் உடை மாற்றிக் கொண்டு வருவதாக அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சுரேஷ்குமாரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்றே மணமகன் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களே உஷார் !!மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி…

Quick Share

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. 21 வயதான இவர் நேற்று இரவு நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு மரு அருந்தி விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பின் தனது நண்பனின் வீட்டில் உறங்கிய போது திடீரென உயிரிழந்தார். இதுக்குறித்து எம்பிகே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள், பணம் கொள்ளை… சென்னையில் அத...

Quick Share

எல்லாம் அவன் செயல் பட நடிகர் ஆர்கேவின் மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர் கே

தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’, ‘அழகர் மலை’ ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ) ஆர். கே. 63 வயதான ஆர்கேவுக்கு 53 வயதில் ராஜி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தனர்.

மனைவியை கட்டிப்போட்டு

இந்நிலையில், ராதாகிருஷ்ணா நேற்று வெளியில் சென்றிருந்த நிலையில் மனைவி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர்.

250 பவுன் நகைகள்

இதையடுத்து வீட்டின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

10 தனிப்படைகள்

மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நடிகர் ஆர்கே வீட்டில் 10 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்த ரமேஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தவறான சிகிச்சையால் சிகிச்சையால் பறிபோன அப்பாவி சிறுமியின் உயிர்!

Quick Share

சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி நந்தினி வயிற்று வலி பிரச்சனை காரணமாக மண்ணடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அல்சர் பிரச்சனை இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. செவ்வாய்கிழமை இரவு செவிலியர்கள் சிறுமிக்கு ஊசி ஒன்று போட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுமி, சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட நிலையில், 6 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகளை இழந்து விட்டதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. 

மருத்துவமனையில் இருந்து பெற்றோர் ஒப்புதல் இன்றி மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதாக கூறி மாணவியின் தாய் அழுது கூச்சலிட்டார். அய்யோ ஊசி போட்டு கொன்னுட்டாங்களே” தலையில் அடித்து கதறிய தாயால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் உயிரிழப்புக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மழை-மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க பிரத்யேக எண்கள் அறிவ...

Quick Share

தலைநகர் சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று (நவம்பர் 1) காலை சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சில சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி நிற்பது, மரம் முறிந்து விழுதல், மின்வெட்டு பிரச்சினை, மின் கசிவு, கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை

1913 
044 – 25619206
044 – 25619207
044 – 25619208
,

ஆகியவை ஆகும். சென்னைவாசிகள் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் “நம்ம சென்னை” மொபைல் செயலி மூலமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக வடகிழக்கு பருவமழையை ஒட்டி மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ஆனால் விரைவாக பணிகளை முடிக்காமல் இருந்ததால் அவ்வப்போது பெய்து வந்த மழையால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சில உயிரிழப்புகளையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து பணிகள் வேகமெடுத்த நிலையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையானது, பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்காமல் வடிகால்கள் வழியாக ஓடிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள்

மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுப்பேட்டை பகுதிகளில் தெருக்களில் இருந்த மழைநீரை மோட்டார் மூலம் சாலைப் பகுதிகளில் விட்டதாக கூறப்படுகிறது. 

இது வாகன ஓட்டிகளை அவதிக்கு ஆளாக்கி வருகிறது. மேலும் அசோக் நகர், காமராஜர் சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆதம்பாக்கம் பகுதியில் ராமகிருஷ்ணா நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனி, ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இங்கெல்லாம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை.

சென்னை மக்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Quick Share

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை, அண்ணா சாலை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், பிராட்வேஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்… 11-ம் வகுப்பு மாணவன் பலியான சோகம்…

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. தச்சுத்தொழிலாளி. இவரது இளைய மகன் யுவராஜ் (வயது 16). 

மாம்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல நல்லம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கண்டிகை வந்த யுவராஜ் அங்கிருந்து வண்டலூர், மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் மாணவர் யுவராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி யுவராஜ் பரிதாபமாக இறந்தார். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பள்ளி மாணவர் பலியான தகவல் அறிந்து மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடினர். 

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை முழுவதும் 17 பட்டாசு விபத்துகள்

Quick Share

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடைபெற்றதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இந்த விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவிலான பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொளத்தூரில் உள்ள தனியார் உர நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. 3 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னை, அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 5 தீயணைப்பு வாகனம் கொண்டு, தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இளையோரே பெண்ணை பற்றிய முழு விவரம் தெரியாமல் திருமணத்திற்குள் நுழையாதீர்…. திரும...

Quick Share

சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுடன் 40 நாட்கள் வரை வாழ்ந்துவிட்டு தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணின் செயல் குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ளது. பெண்ணின் விவரம் எதுவும் ஆராயாமல் திருமணம் செய்தால் நிலை என்னவாகும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

சென்னை தாம்பரம் தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்த தம்பதியின் மூத்த மகன்தான் நடராஜன்(30). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேக்கரியில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்ற பெண்ணுடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடவையில் காதலிக்க தொடங்கினர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நடராஜன் அபிநயாவின் பெற்றோரை தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு அபிநயா, நான் ஏற்கனவே வயதான நபரை திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். எனவே, இந்த திருமணத்துக்கு எனது பெற்றோர் சம்மதிக்கமாட்ர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடராஜனின் பெற்றோரிடத்தில் அபிநயா தெரிவித்துள்ளார். இதனால் இரக்கம் பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். 

திருமணமாகி 40 நாட்கள் ஆகிய நிலையில் சம்பவத்தன்று காலை படுக்கையில் இருந்து அபிநயா திடீரென மாயமியுள்ளார். பின்பு அறையில் இருந்த பீரோ திறந்து இருந்தால் பார்த்த போது அதில் வைக்கபட்டிருந்த 17 சவரன் தங்க நகைகள், பட்டு புடவைகள் மற்றும் 20,000 ரொக்கம் ஆகியவை மாயமானது தெரியவந்தது.

இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைபற்றி அதில் இருக்கும் விலாசத்திற்க்கு போலீசார் வரைந்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அபிநயாவின் பின்புலம் எதுவும் தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். அபிநயா யார்? அவருக்கு உண்மையில் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதா உள்ளிட்ட விவரங்கள் அவரை கைது செய்த பிறகே தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

You cannot copy content of this Website