34 பெண்கள்ளுடன் மிக நெருக்கம் : காணொளி பதிவு செய்த வழக்கில் கைதான நபர்.
கனடாவின் கியூபெக் பகுதியை சேர்ந்த நபர், பெண்களுடன் நெருக்கமாக இருந்து, அந்த காட்சிகளை படம் பிடித்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிக்கியுள்ளார். கியூபெக் பகுதியை சேர்ந்த 43 வயது மார்ட்டின் பிள்ளை என்பவரே செவ்வாய்க்கிழமை பகல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,
அந்த நபர் குறைந்தது 34 பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொண்டு அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதாகியுள்ள மார்ட்டின் பிள்ளை மீது மிரட்டி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019 முதலே இந்த நபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணொளிகளில் இருந்து 3 பெண்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மார்ட்டின் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இவரை அடையாளம் காண நேர்ந்தால், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பாலியல் தொழிலாளர்கள் கண்டிப்பாக இந்த வழக்கில் உதவ முன்வர வாய்ப்பில்லை என்றே அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.