திண்டுக்கல்

காதலனை நம்பி சென்ற அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்

Quick Share

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் வா தரையில் உள்ள இலக்கை வில்லுக்கு பின்புறம் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அவர் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி மாலை பணிக்குச் சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை எங்கே தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணிலிருந்து போன் வந்ததை கண்டறிந்த போன் வந்த எண்ணெய் ஆய்வு செய் அதில் அந்த எண் ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்து வந்த தங்கதுரை என தெரியவந்தது.

கள்ளிமந்தையம் போலீசார் தங்கதுரை பற்றி விசாரணையை மேற்கொண்டனர் பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் ஜெயந்தியும் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகி உள்ளன. 6 மாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன் செய்ததால் ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கடந்த 31ஆம் தேதி அன்று இரவு தங்க துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் அங்கு வருவதாகவும் தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். 1ம் தேதி மாலை ஒட்டன்சத்திரத்தில் பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர் மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தங்கதுரை அவனது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.

இதற்கிடையே காதலனின் வெறிச்செயல் குறித்து அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் கொலையாளிகள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என கூச்சலிட்டு அவர்கள் மறியலை கைவிட்டு விட்டு ஜெயஸ்ரீயின் உடலை வாங்கிச் சென்றனர் கைது செய்யப்பட்ட தங்கதுரை மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கள்ளிமந்தயம் போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் காதலில் விழுந்து காதலனை நம்பி சென்ற பாவத்திற்கு அப்பாவி பெண் கொல்லப் பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 20 நாளில் நேர்ந்த சோகம்.., 20 வயதில் கணவனை பறிகொடுத்த மனைவி

Quick Share

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (வயது 26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மினி லொறி, மோட்டார் சைக்கிள் மீதுநேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
“இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுமாப்பிள்ளை இறந்த தகவலை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கதறி அழுதனர்.

லியோவின் குடும்பத்தாரும் அழுதார்கள். இந்த காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

42 வயது பெண்ணுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்த 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி! ...

Quick Share

தமிழகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த இளைஞனை 42 வயது பெண் சரமாரிய கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப். 24 வயதான இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர் வீட்டின் அருகே பிரமிளா என்ற 42 வயது பெண் வசித்து வருகிறார். பிரமிளாவின் கணவர் ராஜேஷ் 6 ஆண்டுகள் முன்பு உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து தற்போது அவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு, பிரதீப் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது.

இது குறித்த தகவல் பிரதீப்பின் வீட்டாருக்கு தெரியவர, உடனே அவர்கள் மகனுக்கு வேறு ஒரு இடத்தில் அவசர அவசரமாக வேறு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூற, இருவருக்கும் அப்போதே பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இருவரும் சமரசம் ஆகியுள்ளனர்.

அதன் பின் இருவரும் தீபாவளியை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். இதற்கிடையில் பிரதீப்பிற்கு மீண்டும், வீட்டில் பெண் பார்க்க ஆரம்பிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா, என்னை விட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.

இப்பவே எனக்கு தாலி கட்டு, இப்படியே இந்த வீட்டிலேயே ஒன்றாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா வீட்டின் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து, தலையிலும், மார்பிலும் சரமாரியாக வெட்ட, பிரதீப் அந்த இடத்திலே சரமாரியாக சுருண்டு விழுந்தார்.

அவரின், சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதீப்பின் பெற்றோர் பிரமிளா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You cannot copy content of this Website